Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Pedophilia – கொடூர‌ பாலியல் மிருகங்கள் ! விழிப்புணர்வு தேவை = வீடியோ

Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டீர் கள், எனினும் இந்த சொல்லின் தன்மையை பற்றிய சம்பவங்களை அடிக்கடி சமூகத்தில் சம்பவங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இன்று நாம் Pedophilia என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். Pedophilia இச் சொல் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே புழக்கத்தில் வந்ததுடன் மக்கள் மத்தி யில் விளிப்புணர்வாக பேசப்பட்டது. Pedophilia என்றால் வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் அவா என்பது பொருளாகும். அதாவது, 16 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் (வயது வந்தவராக கருதப்படும் வயதெல்லை) 13 வயதிற்கும் உட்பட்ட சிறிவர்களின் மீது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார் எனின் அவர் Pedophilia என இனங்கானப்படுவார்.
 
பொதுவாக இவ்வாறான நபர்கள் தமது ஆரம்ப உறவை தன்னைவிட 16 வயதில் மேற்கொள்ள ஆரம்பிக் கின்றார்கள். தன்னைவிட 5 வயதேனும் குறை ந்த பிள்ளைகளிடம் தான் தனது முதலாவது உறவை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு நாம் ஒரு விடையக் கருத வேண்டும், தன்னைவிட 5 வயதேனும் குறைந் தவர் என்றால் 5 வயது குறை வானவருடன் தான் உடலுறவு கொள்வார் என நினைப்பது தவறாகும். 50 வயதுள்ள Pedophilia நபர் 5 வயது குழந்தை யுடன் கூட உடலுறவு கொள்ளும் ஆர்வத்தை கொண்டி ருக்கக்கூடும்!
 
உண்மையில் இந்த Pedophilia என்பது ஒரு மன நோயாக கருதப்படுகிறது. எனினும் மருத்துவத்தின் இன்னோர் ரீதியாக மாற்று பாலியல் இன்பமாக கருதப்படுகிறது. Pedophilia நோயாளிகள் கண்டிப்பாக மருத்துவரை நாடி மனோரீதியான மேம்பாட்டை பெறுதல் அவசியம். Pedophilia மன நோ யாளியாக இருந்தாலும், சிறுவர்களை பாலியல் நடவடிக்கையில் ஈடு படுத்துவது உலக அளவில் பாரிய தண்ட  னைக்குரிய குற்றமாகும். இவ் Pedophilia நோய்த்தாக்கம் பொதுவாக ஆண்களிடையே காணப்படும், எனினும் பெண்களிடையேயும் கணிசமான அளவில் காணப்படுகின்றது.
 
அவர்களின் பொதுவான நடவடிக்கைககள் :
  • சிறிவர், சிறுமியருக்கு பாலியல் படங்களை காண்பித்தல்.
  • தமது உறுப்புக்களை காண்பித்தல் / உணரச்செய்தல்.
  • தமது அண்டைவீடு, அல்லது உறவினர்களின் குழந்தைகளையே பொதுவாக தமக்கு இரையாக்கு வார்கள்.
சம்பந்தப்பட்டவர்களை நீங்கள் இனங்காண்பீர்களானால், உடனடியாக மருத் துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். நட்பு, உறவு, முகம் கருதி தட்டிக் கழித்தீ ர்களானால், அவரின் எதிர்காலத்திற்கும் பல குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பாரிய தாக்கமாக அமையும். இவ்வாறான நபர்களை இனங்கான இப்பதிவை பகிருங்கள். அல்லது கருத்துக்களை பகிருங்கள்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: