Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு; ஒழுங்கு நடவடிக்கை ரத்து – ஜெ.,

தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப் படுவதாக வும் இன்று ஜெ., அறிவி த்தார்.

கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார். தொட ர்ந்து அவர்கள் மீது நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசி கோர்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் ஜெ.,வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எல்லா முடிவுகளும் நானே எடுத்தது என்றார். இதுவும் ஜெ.,வுக்கு சற்று திருப்தியை தந்தது.

இதனையடுத்து கடந்த வாரம் சசி , ஜெ.,வுக்கு ஒரு கடிதம் எழுதினார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணியாற்ற விரும்புவதாகவும், கனவில் கூட அக்காவுக்கு துரோகம் நினைத்தது இல்லை என்றும் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். கடிதம் எழுதப்பட்ட உடனே சசி மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்டுவார் என்று பேசப்பட்டது அதன்படி ஜெ., இன்று சசி மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளார். ஆனால் சசியின் உறவினர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றமில்லை என்றும் கூறியிருக்கிறார் ஜெ., எப்படியோ சசிக்கு எதிரான கட்சி பிரமுகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.

நடவடிக்கையில் மாற்றமில்லை தொடர்கிறது; ஜெ., இன்று அறிவித்துள்ளதன்படி சசியை தவிர ஏனை யோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்கிறது. இதில் மாற்றமில்லை என அவர்களது பெயர்களை வெளியிட்டு அவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என ஜெ.,கட்சியினரை கேட்டுள்ளார். இந்த பெயர் விவரம் வருமாறு: நடராஜன் (சசி கணவர் ), திவாகரன் (சசிகலாவின் அண்ணன் ) , தினகரன் ( சசிகலா சகோதரி வனிதாவின் மகன்), பாஸ்கரன் (வனிதாவின் மற்றொரு மகன்) , சுதாகரன் ( வளர்ப்பு மகனாக அறிவிக்கப்பட்டவர்; வனிதா மகன்) , ராவணன் ( சசி சகோதரன் ஜெயராமனின் மனைவி இளவரசியின் மருமகன்) , ராமச்சந்திரன் (சசிகலாவின் சகோதரன் ) குலோத்துங்கன் ( நடராஜன் சகோதரன் சம்பந்தமூர்த்தியின் மகன்), ராஜராஜன், சந்தானலட்சுமி, வைஜயந்தி மாலா, சுந்தரவதனம், மகாதேவன், தங்கமணி, கலியப பெருமாள், பழனிவேலு, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி.

உறவு முறிந்தது ஏன்? சசிகலா விளக்க கடிதம் முழு விவரம் : முதல்வர் ஜெ.,வுடனான உறவு முறிந்தது ஏன் என்பது குறித்து சசிகலா தரப்பில் கடந்த 28 ம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் கூறியிருந்தது: நானும் முதல்வர் ஜெ.,வும் 1984 முதல் 24 ஆண்டுகளாக பழகி வந்துள் ளோம். 1988 முதல் போயஸ் தோட்டத்தில் அவருடன் வசித்து வந்தேன். அவரது பணிச்சுமையை குறைக்க விரும்பினேன். அவருக்கு பணியாற் றும் நோக்கம் தவிர உள்நோக்கம் எதுவும் இல்லை. அவரும் என்னை தங்கையாக ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அவருக்கு துணையாக பணி யாற்றி வந்தேன்.

ஆனால் போயஸ் தோட்டத்தில் இருக்கும் போது எனது உறவினர்கள் நண்பர்கள் தங்களின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்பது ஜெ., ( கடந்த டிசம்பர் மாதம் ) நடவடிக்கை எடுத்த பின்னரே தெரியவந்தது. ஜெ.,வுக்கு எதிராக சதி செய்தார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. அவருக்கு நான் கனவிலும் துரோகம் நினைத்தது இல்லை. ஜெ.,வுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கு வேண்டாதவர்கள் ஆவர். ஜெ.,வுக்கு எதிராக துரோகம் இழைத்தவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் உறவை துண்டித்து விட்டேன். எனக்கும் அவர்களுக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை. எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியில் இருக்க வேண்டும் பொது வாழ்வில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. ஜெ,.வுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்பு கிறேன். ஏற்கனவே அவருக்கு எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனியும் எனக்கென வாழாமல் அக்காவுக்கு உதவியாகவே இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த உருக்க கடிதத்தை ஜெ., இன்று ஏற்றுக்கொண்டார்.

News in Dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: