Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (01/04) ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் அண்ணன் – தங்கைகள் என்பது நம்பிக்கை

அன்புள்ள அம்மா அவர்களுக்கு —

நான், 22 வயது பெண். நான் ஒருவரை விரும்புகிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். நாங்கள், ஐந்து வருடங்க ளாக காதலித்துக் கொண்டி ருக்கிறோம். எங்கள் பெற் றோர், காதலுக்கு தடை சொல் பவர்கள் அல்ல. என் பெற்றோருக்கு நான் காத லிப்பவரை பிடிக்கும். அதே போல், அவர்கள் வீட்டிலும் என்னை பிடிக் கும். நான் முதுகலை இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் படிப்பை முடித்து, ஜூனி யர் கெமிஸ்ட்டாக தனி யார் கம்பெனியில் வேலை செய்கிறார்.

எங்களின் திருமணத்திற்கு தடையாக இருப்பது சமுதாயம். நம் சமுதாயத்தில், சில ஜாதிகளில், ஒரே குலத்தில் பிறந்த ஆணும், பெண்ணும், அண்ணன் – தங்கை என்றும், அதனால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது என்றும் வழக்கம் இருக்கிறது. இதுதான் என் பிரச்னை. நாங்கள் இருவரும் மிகவும் தூரத்து உறவினர்கள் என்றாலும் ஒரே குலம் என்பதால், எங்களுக்கு திரு மணம் செய்து வைத்தால், உறவினர்கள் தங்களை மதிக்க மாட்டார்கள் என்று எங்களுடைய பெற்றோர் கருதுகின்றனர். வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்ள முடியும்; ஆனால், அதில் எங்களுக்கு விருப்பமில்லை, மனமும் வரமில் லை.

என்னை மிகவும் நேசிக்கும் என் பெற்றோரின் மனநிலையை புரி ந்து கொண்டேன். அவர்களின் ஒரே எண்ணம், தங்களுடைய உறவி னர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான். அதனால், “மறந்து விடு…’ என்று சொல்கின்றனர்; ஆனால் என்னால், என்னை உயிராக நினைக்கும் அவரை மறக்க முடிய வில்லை. நான் வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன்.

என் பெற்றோரின் மனதை மாற்ற, ஏதேனும் உபாயம் உண்டா அம்மா? “இது ஒரு பெரிய விஷயமா… இதெல்லாம் பார்க்கிற காலம் எல்லாம் மாறி போச்சு…’ என்று அவர்களுக்கு அறிவுரை கூற யாரும் இல்லை.

என்னாலும் அவர்களுக்கு எடுத்து புரிய வைக்க முடியவில்லை. நீங்கள் இதில் தப்பு ஒன்றும் இல்லை என்று உணர்ந்தால், நீங்கள், என் பொருட்டு முயற்சி செய்து, என் பெற்றோருக்கு புரியும்படியாக பதில் கூற வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய பதிலால், என் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் என் திருமணம் நடைபெறும் என்று நம்புகிறேன்.

எங்களின் காதலை போன்றே அரியானாவில், மனோஜ் – பப்லி வாழ்க்கையில் நடந்துள்ளது; ஆனால், அவர்கள் இருவரும் பெற் றோரின் சம்மதம் கிடைக்காத காரணத்தால், வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண்ணின் உறவினர்கள், இருவரையும் கொன்று விட்டனர். இந்த சம்பவத் தை செய்தித்தாளின் மூலம் தெரிந்து கொண்டேன். பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் நடைபெற, உங்கள் உதவியை, அன்புடன் அந்தரங்கம் மூலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கி றேன்.

— இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத இளம்பெண்.

அன்புள்ள மகளுக்கு —

ஒரே கோத்திரத்தில் பிறந்ததால், நீயும், உன் காதலனும் திரு மணம் செய்து கொள்ள முடியாத நிலை. தகுந்த விளக்கங்கள் கொடுத்து, உன் பெற்றோரை இத்திருமணத்திற்கு சம்மதிக்க வைக் க வேண்டியுள்ளாய்.

அரியானாவில், ஒரே கோத்திரத்தை சேர்ந்த மனோஜும், பப்லியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஊர் பஞ்சாயத்தின் முடிவின்படி, காதல் ஜோடி, கவுரவக் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. கவுரவக் கொலைக்கு உத்தரவிட்ட ஊர் பஞ்சாயத்தோ, ஒரே கிராம த்தை, ஒரே கோத்திரத்தை சேர்ந்தோர் திருமணம் செய்து கொள்வ தை தடை செய்யும் திருத்தத்தை, இந்து திருமணச் சட்டத்தில் கொண்டுவர கூட்டம் கூட்டி போராடுகிறது. இது, நாளிதழில் வந்த செய்தி.

இரு பக்கங்களில் மணி, மணியான கையெழுத்தில் கடிதம் எழுதி யிருக்கிறாய். ஒவ்வொரு பக்கத்தையும் பென்சில் கோடுகளால் சதுரப்படுத்தி இருக்கிறாய். நாளிதழ் செய்தியை கடிதத்துடன் இணைத்துள்ளாய். உங்களிருவரின் காதல் மெய்யானது, உண்மை யானது, ஆயுளுக்கும் நீடிக்கக் கூடியது என மனதார நம்புகிறேன்.

உங்களிருவரையும் நேரில் பார்க்காமலேயே கூறுகிறேன்… நீங்கள் மேட் பார் ஈச் அதர் ஜோடிகள்.

நீங்களிருவரும் திருமணம் செய்து கொள்ள சாதகமாய் இருக்கும் விஷயங்களை கீழே பட்டிய லிடுகிறேன். இதை, உன் பெற்றோரின் கவனத்துக்கு எடுத்துச் செல் கண்மணி.

1.உங்களது திருமணத்தை எதிர்க்கும் சமுதாயம், உங்களின் திருமணத்தை சட்ட விரோதம் எனக் கூறாது. ஒழுக்கக்கேடானது என்றே சொல்லும். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள், ஒரே கிராம த்தை சேர்ந்தவர்கள் மணந்து கொள்ளக் கூடாது என்பது அவர்க ளின் தொன்று தொட்டு வரும் நம்பிக்கை; இதை ஆங்கிலத்தில், “டாபு’ என்பர். ஒரே கிராமத்தை சேர்ந்தோர், தற்சமயம் திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் திரு மணம் செய்து கொள்ளக் கூடாது என்ற பிடிவாதம், தென் மாநிலங்களில் குறைவாகவும், வட மாநிலங்களில் அதிகமாகவும் காணப்படுகிறது. ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆண், பெண்ணின் முந்தைய தலைமுறைகளை ஆராய்ந்து கொண்டே போனால், ஒரு கட்டத்தில் அவர்களின் சகோதரன் – சகோதரி உறவு வெளிப்பட்டு விடும் என்பது பழைமைவாதிகளின் வாதம்.

இந்தியாவில், கோத்திரத்தை பிறப்பால் பிரிப்பதில்லை; கோத்திர த்தை, ஸ்தாபித்த குருக்களால் பிரிக்கின்றனர். பரத்வாஜ கோத்தி ரம் என்பது பரத்வாஜ் மகரிஷியை பின்பற்றுவது. பரத்வாஜ் மக ரிஷியை வெவ்வேறு குடும்பத்தார் பின்பற்றுவர். இருந்தாலும், அந்த வெவ்வேறு குடும்பத்தார், ஒரே குடும்பமாய் கருதப்பட வேண்டும் என்பது அறிவுப் பூர்வமான வாதமல்ல.

சில ஜாதிகளில், கோத்திரங்கள் செய்யும் தொழிலை வைத்து பிரிக் கப்படுகின்றனர் – பிறப்பால் அல்ல. விஸ்வகர்மாக்கள் இரும்பு கொல்லர், தச்சர், உலோகத்தை சுத்தம் செய்பவர், சிலை வடிப் பவர், பொற்கொல்லர் என, ஐந்து வகை தொழில் செய்பவர்களாய் பிரிக்கப் பட்டிருக்கின்றனர். ஐந்து வகை தவிர, வேறு கோத்திரங்க ளும் விஸ்வகர்மாவில் உண்டு. ஆகையால், மேற்சொன்ன ஐவ கை கோத்திரங்களும், ஒரே குடும்பத்திலிருந்து தோன்றியவை எனக் கூறி விட முடியாது.

2.ஒரு குடும்பம் மிகுந்த சிரமப்பட்டு தன்னுடைய, 10 – 15 தலை முறைகளின் மூதாதையர்களை கண்டு பிடிக்க முடியாது. நானூறு வருடங்களுக்கு முன், ஒரு காலப் பயணம் மேற்கொள்ளுதல் சாத்தியமல்ல. ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் அண்ணன் – தங்கைகள் என்பது நம்பிக்கை.

3.ஒரு கோத்திரத்தின் பெயரை வெவ்வேறு ஜாதிகளிலும் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, பரத்வாஜ கோத்திரம் பிராமணர்களிட மும் இருக்கிறது, விஸ்வகர்மாக்களிடமும் இருக்கிறது. பிராமண ர்களும், விஸ்வகர்மாக்களும் ஜாதியை அடிப்படையாக வைத்து தான் மணந்து கொள்வர்; கோத்திரத்தை அடிப்படையாக வைத்தல்ல. ஒரே ஜாதியில் இருப்பவர் கூட, புனித சின்னங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் சமய ஆராதனை அடிப் படையில், திருமணம் செய்து கொள்ள முடியாத நிலை ஏற்படு கிறது. பிராமணர்களிடையே, 18 வகையான சமய ஆராதனை, பழக்கவழக்கங்கள் நிலவுகின்றன. சமய ஆராதனை மாறுபாடை வைத்தே பிராமணப் பெண்ணுக்கும், பிராமண ஆணுக்கும் திரு மண தடை விதிக்கப்படுகிறது. ரெட்டி சமூகத்தில் பல உட் பிரிவு கள் உண்டு. உட்பிரிவுகள் ஒன்றுக்கு ஒன்று மணந்து கொள்ள தடையும் உண்டு.

4.ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்தால், வெகு சீக்கிரம் அந்த கோத்திரத்தை பின்பற்று வோர் சுருங்கிவிடக் கூடும் என்ற பயம் பழமைவாதிகளுக்கு. இன்னொரு கோத்திரத்தில் இருந்து பெண் எடுத்தால், மாப்பிள்ளை கள் கோத்திரம் பெருகும் என்பதும் அவர்கள் நம்பிக்கை.

5.ஒரே கோத்திரத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் ஒரே மரபணு வை சேர்ந்தவர்கள் என, சில போலி அறிவு ஜீவிகள் கூறுகின்றனர். ஒரே கோத்திரத்தை சேர்ந்த குடும்பங்கள், ஆதியில் பல குடும்பங் களிலிருந்து, பல கோத்திரங்களிலிருந்து பிரிந்து வந்தவை. வெவ் வேறு பெற்றோரிடமிருந்து வரும் மணப்பெண், மாப்பிள்ளைகள் ஜீன்களை மாற்றங்களுக்கு உள்ளாக்குகின்றனர்.

6.ஆதாம் – ஏவாள் உண்மை என்றால், இவ்வுலகின், 650 கோடி மக்க ளும் சகோதர – சகோதரிகளே. மகளே… நீயும் படிப்பை முடித்து வேலைக்கு போன பின், பாதக – சாதக சூழ்நிலை பார்த்து, பதிவு திருமணம் செய்து கொள்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

11 Comments

 • There is a lot of misunderstanding about “gothra”.Gothra classifications are there across the castes and all over India.”Go-thrahah” means “cattle pen” in Sanskrit.The old aryan economy(aryans were there all over india including tamilnadu) ran on the basis of cattle pens.Rishis were the old social leaders as well as religious leaders and cattle pen owners.People (aryans–indians ) worked in these cattle pens and lived together as one family.Every person had an official rank and status which was reflected through the caste but all were employees of the same cattle pen.Marriage within the cattle pen was prohibited to prevent complications(CEO marrying a clerk –Finance manager marrying a sub staff/typist) in the running of the cattle pen and to develop bonds with the other aryan cattle pens.Once a lady is married to a person in another cattle pen her “go-thraha” changed.Even today in the middle east many companies have a rule that if any of the employees marry another employee then one of them must leave the job.This is same as the cattle pen logic.

  So people of same go thrahah can marry in this modern age since the economy does not run through the rishis or through the cattle pens.In my opinion there is no bar to this girl marrying her beloved in the same go thrahah.

  There is a way to legally solve this problem.If this girl is adopted(sweekaram) as a daughtet by a person of another go thrahah then her go thrahah changes immediately.She can marry her beloved without any hassle.She need not forget her beloved.
  Please keep me informed whether this daughter marries her beloved.I wish and bless her .
  Ravisankar
  Muscat
  Oman

 • There is a lot of misunderstanding about “gothra”.Gothra classifications are there across the castes and all over India.”Go-thrahah” means “cattle pen” in Sanskrit.The old aryan economy(aryans were there all over india including tamilnadu) ran on the basis of cattle pens.Rishis were the old social leaders as well as religious leaders and cattle pen owners.People (aryans–indians ) worked in these cattle pens and lived together as one family.Every person had an official rank and status which was reflected through the caste but all were employees of the same cattle pen.Marriage within the cattle pen was prohibited to prevent complications(CEO marrying a clerk –Finance manager marrying a sub staff/typist) in the running of the cattle pen and to develop bonds with the other aryan cattle pens.Once a lady is married to a person in another cattle pen her “go-thraha” changed.Even today in the middle east many companies have a rule that if any of the employees marry another employee then one of them must leave the job.This is same as the cattle pen logic.

  So people of same go thrahah can marry in this modern age since the economy does not run through the rishis or through the cattle pens.In my opinion there is no bar to this girl marrying her beloved in the same go thrahah.

  There is a way to legally solve this problem.If this girl is adopted(sweekaram) as a daughtet by a person of another go thrahah then her go thrahah changes immediately.She can marry her beloved without any hassle.
  She need not forget her beloved.

  Please keep me informed whether this daughter marries her beloved.
  I wish and bless her .

  Ravisankar
  Muscat
  Oman

 • Any person who has any questions/doubts on my posting about go thraha can e mail me to ravisankar46@gmail.com or can speak to me over my cell phone 00968 99356466.
  I wsh that this daughter must be allowed to marry her beloved.Go-thrahah is not a problem at all.
  Ravisankar
  Muscat
  OMAN

 • ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளுவதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

  எந்த மதத்தை எடுத்துக்கொண்டாலும் தலைமுறைகள் ஒரு கணவன் மனைவியிலிருந்து உருவாகிஉள்ளன .
  ஆதாம், ஏவாள் ,தக்ஷப்ப்ரஜாபதி,காச்யபர், திதி உதாரணங்கள் .
  அப்படிப்பார்க்கையில் அனைவரும் சஹோதர சஹோதரிகளாகிறோம்..
  அதே சமயம் மரபணு சார்ந்த உண்மைகளை ஒதுக்கவும் முடியாது.
  விளக்கத்திற்கு
  “Now we know even in modern Genetics that marriages between cousins will increase the risk of causing genetic disorders. That is because, say suppose there is a recessive dangerous gene in one person. What this means is that say a person is carrying a dangerous abnormality causing gene in one of his chromosome, but whose effect has been hidden in that person (or is not being expressed) because the corresponding gene in the pairing Chromosome is stronger and hence is preventing this abnormality causing gene from activating.
  Now there are fair chances that his offsprings will be carriers of these genes throughout successive generations. As long as they keep marrying outside his genetic imprint, there is a fair chance that the defective gene will remain inactive since others outside this person’s lineage most probably do not have that defective gene. Now if after 5-10 generations down the line say one of his descendants marries some other descendant who may be really far away cousins. But then there is a possibility that both of them are still carrying the defective gene, and in that case their children will definitely have the defective gene express itself and cause the genetic abnormality in them as both the Chromosomes in the pair have the defective genes. Hence, the marriages between cousins always have a chance of causing an otherwise recessive, defective genes to express themselves resulting in children with genetic abnormalities.

  So if the Vedic Rishis had allowed marriages within the same Gotras, then there were chances that the resulting male can be a victim of such defective gene expression, and any such gene expressions which took place in the 5% exposed area of the Y Chromosome would be fatal for the continuity of that Y Chromosome. Even after hundreds of generations there would still be chances of any defective genes being propagated within these successive generations, and marriage within the same Gotra would provide a golden opportunity for these genes to express themselves, there by causing the genetic abnormality in the offspring.

  And hence the ancient Vedic Rishis created the Gotra system where they barred marriage between a boy and a girl belonging to the same Gotra no matter how deep the lineage tree was, in a bid to prevent inbreeding and completely eliminate all recessive defective genes from the human DNA.

  http://www.hitxp.com/articles/veda/science-genetics-vedic-hindu-gotra-y-chromosome-male-lineage-extinction/

  எனவே எதிர் காலத்தில் மன உளைச்சலைத் தவிர்க்க ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மணந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.

 • Adam and Eve are imaginary charecters.Their existence as first human pair will only lead to the absurd notion that all the people of this world originated from the same parents. Same is the case with imagining that the Rishis produced the entire populations of this world.
  Gothras are spread across the castes.Question of lineage or chromosomes or relation as siblings do not arise at all.Rishis were the owners of the huge Aryan cattle sheds.ALL BELONGING TO ONE CATTLE SHED BELONGED TO THE SAME GOTHRA.Nowhere it is stated that the Rishis fathered all the persons of the same Gothra.
  Once the girl in a gothra is adopted as his daughter by a Man of another gothra her gothra changes and that ends the problem once and for all.
  Gothra has nothing to do with genetics or lineage or family or sibling relationship.Gothra is just the name of the employer of the fore fathers thousands of years ago.

 • It is not necessary that all human beings got evolved from one single human pair of man and woman.Emergence of thousands of pairs all over the globe simultaneously or over a period of time is not ruled out or disproved .One single pair(Adam and Eve theory) theory only makes all sisters and brothers.Our discussion is with reference to Gothra only.Species evolution and Darwin’s theory are beyond the scope of this discussion with relevance to Gothra and permissibility/prohibition of marriages within persons of the same gothra.

 • Please come back to the discussion on Gothram–Gau trahi–Cow Shed.All employees of the same cow shed(irrespective of rank/position/caste) are of the same gotra.That does not make them brothers and sisters now after several thousands of years so that they cannot marry now.Employees of the same company/employer (cow shed)cannot marry.But this restriction is removed once the female employee becomes the employee of another company (cow shed)or is adopted by a male employed in another company (cow shed).It is strange that even today some companies in the middle east have a similar rule.If two employees of the same company wish to marry each other then one of them must get employed elsewhere or resign the job.
  Gothra had more to do with office(cow shed) administration and staff discipline.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: