Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐ.பி.எல். – வஞ்சிக்கப்படும் சென்னை ரசிகர்கள்!

நீங்கள், சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகரா? சென்னை சேப்பாக்கத்தில் மேட்ச் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்களா? எடுத்து வையுங்கள் ரூ.700ஐ. என்னால் வரிசையில் நின்று அடிதடிபட்டு டிக்கெட் வாங்க முடியாது என்கி றீர்களா? ஆன்லைனில் 700 ரூபாய் டிக்கெட் விற்பனை கிடையாது. 1200 ரூபாய் இருந் தால் மட்டும்தான் டிக்கெட் வா ங்க முடியும். சென்னையைப் போல மற்ற ஊர் ரசிகர்களுக்கு ம் இதே மாதிரியான நிலைமைதானே என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.9 அணிகள் உள்ள ஐ.பி.எல்.-லில், சென்னை, பெங்க ளூரூ தவிர மற்ற அணிகளின் டிக்கெட்டுகள் ரசிகர்களின் வாங்கும் திறனுக்கு ஏற்றபடி தான் நிர்ணயம் செயப்பட்டு ள்ளன. கொல்கத்தாவில் குறை ந்த விலை டிக்கெட், ரூ.300 மட்டுமே. ‘மேட்ச் பார்க்க எல் லோரும் வரவேண்டும் என்று விரும்புகிறோம். நிறைய மாணவர்களை மைதான த்தில் பார்க்க விரும்புகிறோம்’ என்று பேசுகிறார் கொல்கத்தா அணியின் டைரக்டர் வெங்கி மைசூ ர். இந்தக் கரிசனம் ஏன் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினரிடம் இல்லை? கொல்கத்தா போல மற்ற அணிகளின் டிக்கெட் விலை களும் மிகக் குறைந்த விலையிலேயே உள்ளன. மும்பை- ரூ.625, பஞ்சாப் மொஹலி – ரூ.375. ஜெப்பூ ரில் ரூ.200, புனேவில் ரூ. 250, விசாகப்பட்டினத்தில் ரூ.300 என எல்லா அணிக ளும் ரசிகர்களுக்கு எவ்வி த பாதிப்பும் ஏற்படக்கூடா து என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். 
 
சென்னை ரசிகர் 700 ரூபாய் கொடுத்தாலும் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்துதான் மேட்ச் பார்க்க முடியும். சினிமா தியேட்டர் போல கிரிக்கெட் மைதான டிக்கெட்டு களுக்கு வரிசை எண் கிடை யாது. ஒருவேளை நீங்கள் லேட் டாகப் போக நேர்ந்தால் உட்கார இடமி ல்லாமல் போகலாம். சரி, 700 ரூபாயைக் கொடுத்து வி டலாம் என் றாலும் சென்னை ரசிகர்கள் ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை வாங்கிவிட முடியாது. ரூ.1200க்கு அதிகமா ன விலையுள்ள டிக்கெட்டுகளே ஆன்லைனில் வாங்க முடியும் என்பது சென்னை ரசிகர்களை மிக வும் ஏமாற்றுகிறது. ஆனால், மற்ற அணிகளின் குறைந்த விலை யுள்ள டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற முடியும். ‘தமிழக அரசு 25 சதவிகித வரி விதித்திருப் பதால் எங்களுக்கு வேறு வழியில் லை’ என்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இதே வரி மற்ற மாநிலங் களிலும் உண்டு. ஆனாலும், ரசிகர் களின் நலனில் மற்ற அணிகள் செலுத்திய அக்கறையை சென் னை சூப்பர் கிங்ஸ் செய்யத் தவறி விட்டது.
 
இந்த வருடம், புனே அணியைப் பார்த்துப் பரிதாபப்படாமல் இருக்க முடியாது. ஏற்கெனவே யுவ்ராஜ் இல்லாமல் அவர்கள் படாதபாடு பட்டுவிட்டார்கள். இப்போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஹோ ப்ஸும் காயம் காரணமாக விலகிவிட்டார். மிகவும் எதிர்பார்க்கப் பட்ட தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் லெவியை மும்பை வாங்கிவிட்டது. யுவ்ராஜ் இல்லாத தால் கங்குலி கேப்டனாக நியமிக் கப்பட்டுள்ளார். நட்சத்திரங்கள் மிளிரும் ஐ.பி.எல். அணிகளுக்கு மத்தியில் புனே வாரியர்ஸ் அணி களையிழந்து இருக்கிறது. முதல் ஐ.பி.எல்.-லில், ராஜஸ்தானும் பா ர்க்க ஏதோ ரஞ்சி அணிபோல இருந் தது. பிறகு, கோப்பையைத் தட்டிச் சென்றது அந்த அணிதான். புனே வும் அப்படியொரு திருப்பத்தைத் தர ட்டும்.சென்ற வருட ஐ.பி.எல்.-ஐ தோனி வென்றபோது, கிரிக்கெட் உலகம் கொஞ்சம் அரண்டுதான் போனது. தோனி தொட்டதெல்லாம் பொன்னான நேரமது. ஆனால், கடந்த ஒரு வருடத்தில் தோனி அப்படியே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டார். எதிர்வரும் ஐ.பி.எல்.-லும் தோற்றுவிட்டா ல் அவருக்குப் பெரிய நெருக் கடியை உண்டாக்கும். இரண்டு முறை கோப்பை வாங்கியது முக்கியமல்ல. மூன்றாவது தடவையாகப் பெறுவது தான் தோனிக்கு – பெரியநம்பிக்கை யை அளிக்கக் கூடியதாக இருக் கும். சென்ற ஐ.பி.எல்., டெலி விஷன் ரேட்டிங்கின்படி ஃபி ளாப். உலகக் கோப்பைக்குப் பிறகு உடனே ஆரம்பிக்கப்பட்டதால் ரசிகர்கள் சோர்ந்து போனார்கள் என்று சொல்லப்பட்டது. அதனால், இந்த வருடம் பி.சி.சி.ஐ.க்கு – பெரிய அமிலச் சோதனைதான்.
மழைக்காகிதத்தில் எழுதப்பட்ட‍து

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: