பிளஸ் 2 முடித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வங்கி கடன் பெற வேண்டிய வழி முறைகள் குறித்து வங்கி அதிகாரி ஜி.விருத்தாசலம், விரிவான ஆலோ சனைகள்.
பணம் இல்லை என்ற காரணத்தால் மாணவர்கள் படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக, கல்வி கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கல்வி கடன் பெற முக்கியமாக, மாணவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். படிப்புக்கான அட்மிஷன் கார்டு கொண்டு வர வேண்டும். மாணவர்கள் குடியிருக்கும் பகுதி க்கு உள்பட்ட வங்கிகளை அணுக வேண்டும். அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளுக் கும் வங்கி கடன் அளிக்கப்படுகிறது. அட்மி ஷன், டியூஷன் பீஸ், தேர்வு கட்டணம் போன் ற அனைத்துக்கும் வங்கியில் கடன் கிடை க்கிறது.
இந்தியாவில் படிக்க அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையும், வெளிநாட்டில் படிக்க ரூ.20 லட்சம் வரையும் கடன் கிடைக்கிறது. வங்கிகளின் கொள்கை முடிவை பொறுத்து, இத்தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரூ.4 லட்சம் வரை ஜாமின் தேவையில்லை. அதற்கு மேல் ரூ.7.50 லட்சம் வரை தொகைக்கு ஏற்ப ஜாமின்தாரர் கையெழுத்து தேவை. ரூ.7.50 லட்சத்துக்கு மேல் சொத்து பத்திரங்கள் வடிவிலான ஆவணங்கள் தேவை. கடனுக்கான வட்டி விகிதம், வங்கிகளுக்கு இடையே மாறும். பொதுவாக 12 சதம் வரை வட்டி இருக்கும். சில படிப்புகளுக் கு மத்திய அரசே வட்டியை மட்டும் செலுத்தும்.
வாங்கிய கடனை 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை திருப்பி செலுத்தும் வாய் ப்புகள் தரப்படும். தனியார் கல்லூரி படிப்புகளுக்கு கடன் அளிப்பது, வங்கிகளின் கொள்கை சார்ந்தது. வங்கி கேட்கும் உரிய ஆவணங் கள், சான்றுகள் அளிக்கப்பட்டால் கல்வி கடன்கள் எளிதில் கிடைக் கும். இவ்வாறு அவர் பேசினார்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்