தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1/2 கிலோ
சேர்க்க வேண்டிய பொருட்கள் 1 :
எலுமிச்சை சாறு – 2 மேஜை கரண்டி
· மிளகாய் தூள் – 1/2 தே.கரண்டி
· உப்பு – தேவையான அளவு
· எண்ணெய் – 1 தே.கரண்டி
சேர்க்க வேண்டிய பொருட்கள் 2 :
· எண்ணெய் – 1 மேஜை கரண்டி
· ஒமம் – 1 தே.கரண்டி (பொடித்தது)
· கடலைமாவு – 3 மேஜை கரண்டி
சேர்க்க வேண்டிய பொருட்கள் 3 :
· தயிர் – 1 கப்
·இஞ்சி பூண்டு விழுது–2 மேஜை கரண்டி
· மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
· கரம்மசாலா – 1/2 தே.கரண்டி (விரும்பினால் சேர்த்து கொள்ளவும்)
· கடுகு – 1/2 தே.கரண்டி (பொடித்தது)
· எண்ணெய் – 2 மேஜை கரண்டி
· உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை சுத்தம் செய்து கொண்டு இரண்டு முன்று இடங்களில் கத்தி யினால் கீறி கொள்ளவும்.
சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 1 யினை சிக்கன் மீது தடவி அதனை சுமார் 10 – 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 2 : ஒமம் மற்றும் கடுகினை தனி தனியாக வறுத்து கொண்டு தனி தனியாக பொடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி ஒமம் பொடியினை போட்டு தாளித்து அத்துடன் கடலைமாவினை சேர்த்து நன்றாக வறுத்து கொ ள்ளவும்.
சேர்க்க கொடுத்துள்ள பொருட்கள் 3 யினை எல்லாம் கலந்து கொள்ளவும். அத்துடன் கட லைமாவு கலவையினை சேர்த் து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையினை சிக்கன் மீது தடவி கொண்டு குறை ந்தது 2 – 3 மணி நேரம் ப்ரிஜில் வைத்து ஊறவைக்கவும்.
அவனை 400 Fயில் மூற்சூடு செய்து கொள்ளவும்.சிக்கன் அவ னில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.
அவனில் 400Fயில் சுமார் 15 நிமிடங்கள் வேகவிடவும். சிக்கனை வெளியில் எடுத்து அதன் மீது சிறிது எண்ணெய் spray செய்து திரு ம்பவும் 400F Broil Modeயில் 15 – 20 நிமிடங்கள் வேகவிடவும்.
சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.
கவனிக்க:
சிக்கனை குறைந்தது 2 – 3 மணி நேரமாவது ஊறவைத்தால் தான் நன்றாக இருக்கும்.
சிறிது ரெட் கலர் சேர்த்து கொண்டால் சிக்கன் நன்றாக கலராக இருக்கும்.
தயிர் மிகவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண் டும்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்