Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சரித்திரம் படைத்த‍ ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படம் – வீடியோ

முதலில் சரித்திரம் படைத்த‍ பாடலையும் பின் அதனை தொடர் ந்து வஞ்சிக்கோட்டை வாலிபன் முழு திரைப்படத்தையும் காணுங்கள்

சரித்திரம் படைத்த‍ பாட லா ன நீங்கள் பார்க்க‍ப் போகும் பாடலின் நடனம் நாட்டியப் பேரொளி பத்மினி மற்றும் நாட்டியத் தாரகை வைஜெ யந்தி மாலா ஆகிய இரு வரும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடுவதாக அமைத்த பாடல்காட்சி இது.

இப்பாடல் இடம் பெற்ற‍ வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படம் ஒரே நாளில் இந்தியிலும் தமிழிலும் வெளயாக இருந்த்து. போட்டி ப் போட்டு ஆடும் இருவரில் யார் வெற்றி பெற்ற‍தாக காண் பித்தாலும் அதாவது பத்மினி வெற்றி பெற்ற‍தாக காண்பி த்தால், இந்தி திரையுலக ரசி கர்கள் எதிர்ப்பை சம்பாதிக்க‍ நேர்ந்திடும். சரி வைஜெயந்தி மாலா வெற்றி பெறுவதாக காண்பித்தால் தமிழ்த் திரை யுலக ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க‍ நேர்ந்திடும் என்ப தால், இப்பாட லின் முடிவில் ஜெமினி அவர்கள் உத்திரத் தில் கட்ட‍ப்பட்டிருகும் விளக்கின் கயிற்றை அறுத்து அந்த விளக்கு மேடையில் விழுந்து நொறுங்கி இருவரும் தங்களது நடனத்தை மறந்து அதிர்ச்சியுற்று பார்ப்ப‍தாக அமைந்திருந்தனர்.  இந்தப் பாட லின் இடையில் இரு வருக்குமிடையே போட்டியை பார்த்து பி. எஸ். வீரப்பா அவர்கள் சபாஷ் சரியான  போட்டி என்பார். அது போ லவே நாமும் திரைப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் சமாளிப்பை கண்டு சபாஷ் போடவேண்டாமா? போடுங்கள் சபாஷ்!

 

த‌கவல் – விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: