இதற்கு அப்பால் சமயம், சமூகம் சாராத சில சடங்குகளை நம்மவ ர்கள் கடைப்பிடிக்கின்றனர். இந்தச் சடங்குகள் சில வேளைகளில் எல்லை கடந்து எதற்காகச் செய்கின்றோம் என்ற விதிமுறைகள் இன்றி நடந்தேறுகின்றது. இதி லும் வெளிநாட்டில் உள்ளவர் களின் உறவினர்கள் இறந்து விட்டால், அந்த மரண வீட்டில் பணம் படும் பாட்டை இவ்வி டத்தில் விபரிப்பதற்குத் தமிழ் மொழியில் வார்த்தைகள் இல் லை என லாம்.
அந்தளவுக்கு பணம் ஆடும் பரதநாட்டியம் பார்ப்பவர் கண் களைக் குளிர வைத்து, மரண வீட்டில் கலந்து கொண்டிருக்கின் றோம் என்ற சிந்தனையை மாற்றிச் சிரிக்க வைக்கின்றது. என்ன செய்வது? புலம்பெயர் நாடுகளிலிருந்து வருவோர் பெருமைக்கா கச் செய்யும் சில காரியங்களில் மரண வீடும் உள்ளடக்கப்படுவது வழமையாகி விட்ட ஒன்று.
இது இவ்வாறிருக்க இறந்தவ ரின் சடலத்தை நடுவீதியில் கொண்டு வந்து விட்டு வெடி கள், மேளங்கள், பான்ட் வாத்தி யங்கள் என பல்லிசைக் கானங் களை நடுவீதியில் ஒலிக்க விடுகின்றனர். இறந்தது மகிழ்ச் சியளிக்கின்றது எனக் கருப்பட நடந்தேறும் இந்தக் களியாட்டங்கள் மிகுந்த கவலையையே அளி க்கின்றது.
ஏனெனில் இளவயதில் இறந்தவருக்கும், முதுமையில் இறந்தவரு க்கும் ஒரே மாதிரியான பல் லிசை கானங்களை இசைப்பது என்பது வேதனையே. எது எவ் வாறாயினும் ஒருவர் இறந்து விட்டார் எனும்போது, அவரை நாம் தெய்வமாகவே கை யெடுத்து வணங்குகின்றோம்.
எனவே அவரின் பூதவுடலைத் தேவார புராணங்களுடன் எடு த்துச் சென்று அவரின் சமய, சமூக சம்பிரதாயங்களின்படி கிரியைகள் செய்வதே சாலச் சிறந் தது. அதை விடுத்து நடுவீதியில் நின்று நாட் டியம் ஆடுவதென்பது நாகரீகமற்ற செயலாகும்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்