Wednesday, July 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சோதனையிலும் தன்னம்பிக்கையுடன் முன்னேறிய “லதா அருண்குமார்” ஒரு நிகழ்கால உதாரணம்

சவால்களும் சோதனைகளும்தான் வீழ்ந்து கிடைக்கும் மனிதனை நிமிரச்செய்யும் என்பதற்கு லதா அருண் குமார் ஒரு நிகழ்கால உதாரணம்

சென்னை தொலைக்காட்சியில் தற் காலிக ஊழியராய் பணியாற்றி இவர் திருமணத் திற்குப் பிறகு தன் குழந்தைகளின் இறப்பை எண்ணி மனம் நொந்து போயிருந்த சூழ் நிலையில் . . . வாழ்க் கையில் இனி எதுவுமே இல்லை என்று நம்பிக்கை இழந்து நிலையில் தன் கணவரின் தூண்டுதலால் அழகுக் கலைப் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.

தன் வீட்டின் அருகிலுள்ள‍ குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சி வகுப்புகளை எடுத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண  மடத்திலுள்ள‍ பால மந்திர் குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி வகுப் புகளை நடத்தி வருகிறார்.

இவரது கலைத்திறன் குறித்து தினமணி நாளிதழும், பொதிகைத்  தொலைக்காட்சியும் வாய்ப்புகள் வழங்கி பாராட்டின•

லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழின் இணை ப்பாக வெளிவந்த லதா அருண்குமாரின் இனிய ஓவியங்கள் என்ற புத்த‍கம் இவரை வெளி யுலகிற்கு  அடையாளம் காட் டியது.

காகித அலங்காரம், நூலிழை அலங்காரம், மட்பாண்டங்களில் கலை வேலை, வாஸ்து மரம் என கைவேலைப்பாடுகள் செய் து அவற்றை விற்பனை செய்து ம் வருகிறார்.

கண்ணாடி ஒவியம்,  ஜரிகை ஓவியம் போன்ற பல ஓவியங்களை யும் வரைந்து வருகிறார். வீட்டிலிருந்தபடி யே முக அழகுக்கான அழகு சாதனங்களை தயாரித்து அழகு நிலையங்களுக்கு விற்ப னை செய்தும் வருகிறார். தன்னம்பிக்கைப்ப் பெண்மணி லதா அருண் குமாரை நீங்களும் வாழ்த்தலாமே!

லதா அருண்குமார், அலைபேசி – 93801 67565

– பத்மாமணி, நம் உரத்த‍ சிந்ததனை மாத இதழ்

One Comment

  • M Prashadh

    Dear Mam, This is Prashadh I am into Real Estate business with real focus Can u plz help me with your references…Thank you

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: