‘3’ ரிலீஸ் ஆனபிறகு தமிழ்சினிமாவின் அடுத்த சூப்பர் தான் தான் என்ற கனவில் மிதந்து கொண்டிருந்த தனுஷுக்கு அதன் மரண தோல்வி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சாடிலைட் உரிமையை சேர்க்காமல், வெறுமனே ஏரியா மட்டுமே 37 கோ டிக்கு வியாபாரம் செய்யப்பட்ட ‘3’ படத்தின் மொத்த வசூலே பத்து கோடி யை தாண்டாது என்கிறார்கள்.
இதற்கு விநியோகஸ்தர்களுக்கு கஸ் தூரி ராஜாதான் பதில்சொல்ல வேண் டுமென்றாலும், படத்தின் தோல்வி, தனுஷை வேறு சில வகைகளில் பதம் பார்த்துவிட்டது.
கொலவெறி பாடலை பிரபலப்படுத்தியதில் மீடியாவுக்கு இருந்த பெரும்பங்கை மறந்து, ரிலீஸுக்கு முன் உங்க தயவெல்லாம் தேவையில்லை என்ற ரீதியில் ‘3’ படத்தின் பத்திரிகையாளர் காட்சியை ரத்து செய்த தனுஷ், தோல்வி உறுதியானதும் ஒவ்வொ ருவருக்கும் தனித்தனியே போன் போட்டு, ‘அண்ணே படத்தைப் பாத்து உங்க விமர்ச னத்த எழுதுங்கண்ணே’ என்று இப்போது கெஞ்ச ஆரம்பித்திருக்கிறாராம்.
அடுத்தபடியாக படத்தின் புரமோஷன் போது, தனது மனைவி ஐஸ்வர்யாவை கழட்டி விட்டு விட்டு, ஸ்ருதியுடனேயே சுற்றியது குடும்பத்தில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. என்ன தான் ஸ்ருதி பட த்தின் ஹீரோயின் என்றாலும், டைரக்டரை விட அவருக்கு அதிக முக்கியத்துவம் தர வே ண்டிய அவசியம் என்ன என்பது ஐஸ்வர்யா உட்பட அனைவரின் கேள்வி.
இது தொடர்பாக சற்று சீரியஸாகவே பேசவேண்டி, லண்டனிலி ருந்து திரும்பிய ரஜினி ஓரிரு முறை அழைத்தும், மூட்-அவுட்டில் இருக்கும் தனுஷ் அவரை சந்திக்க செல்லவில்லையாம். கூடிய விரைவில் பெரும் பஞ்சாயத்து வெடிக்கும் என்கிறார்கள்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்