Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு காரணம் யார்?

தங்க விலைக்கு தங்கம் தான் நிகராக இருக்க முடியும். தங்கத்தின் விலை ஏற்றம் மூக்கின் மேல் விர லை வைக்கச் செய்கிறது. தங்கம் என்பது என்ன? அது ஒரு உலோக வகையை சேர்ந்தக் கணிமம்.
தங்கத்தில் குறை இருப்பினும் அது தன் தரத்தில் குறை காணாது என்கி ன்றார்கள். மனிதனின் உயர்ந்த குண த்தை உணர்த்திச் சொல்ல ‘தங்கமா ன மனிதன்’ என்கிறார்கள். தங்கம் போற்றத்தக்கதா? ஏன் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு ஏற்பட்டது? அது அழிந்து வரும் கணிம ம் என்பதனாலா? உலகில் தங்கம் குறைந்து வருவதற்கு யார் காரண ம்?
மேற்காணும் கேள்விகளுக்கு மனிதனும் அவனது பேராசை போக்கும் தான் கார ணம் என்றால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர் களா? அது தான் உண்மை. தங்கம் என் பது பூமியில் இருக்கும் மண், கல், மரம், செடி கொடி போன்ற வரிசையில் வரும் ஒரு சாதாரண பொருளே. தங்க விலை குறைய வாய்ப்பு இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. மனிதகுலம் தங்கம் என குறிபிடப்படும் பொருளுக்கு மதிப்பளிக் காமல் அதை விலை கொடுத்து வாங்கா மல் இருக்க வேண்டும். இவ்வழி மட்டு மே தங்க விலை குறைய திறவு கோலாக அமையும்.
தங்கத்திற்கு மவுசு ஏற்பட்ட சரித்திரத்தைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப் போம். மனித நாகரீக வளர்ச்சிக்கு வியாபரம் முக்கிய வர்த்தமான மாக அமைந்திருக்கிறது. வியா பார மாற்றுக்கு தங்கத்தையும் அதனை அடுத்து வெள்ளியை யும் உயயோக படுத்தி இருக்கி றார்கள்.

அக்காலகட்டங்களில் யுத்தம் ஏற்படுவது பொதுவான ஒன்று. வெற்றிக் கொண்ட நாடு தோல் வியடைந்த நாட்டை தன் வசமா க்கிக் கொள்ளும். அந்நாட்டில் கிடைக்கும் செல்வங்களை எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக் கொள்வதில் தங்கம் தான் முதலிடம் வகிக்கும். இது தான் மனிதன் தங்கத்திடம் அடிமையான முதல் படி

அரச குலத்தில் தங்கத்தின் உபயோகம் அதிகம் இருந்தது. இதன் வழி தங்கத்தை வைத் திருப்பவர்கள் உயர்ந்தவர்கள் எனும் போக்கு ஏற்பட்டது. முக்கியமாக இந்தியர்களி டையும், எகிப்தியர்களிடையு ம் தங்கத்தின் மவுசு அதிக மாக இருந்தது. தனது நாட்டி ன் செல்வச் செருக்கை காட்ட வும், வளம் பெற செய்யவும் தங்கம் அதிகமாக தேவைபட்டது.

பின்னாட்களில் தங்கத்தின் தாக்கம் நாம் தற்சமயம் புழகத்தில் பயன் படுத்தும் பணமென உருவெடுத்தது. நாக ரீகத்தின் வளர்ச்சி வியாபாரத்தை பெரு க்கியது. மக்கள் நாணய மாற்று வியாபா ரத்தை பரவளாக அமல்படுத்த ஆரம்பித் தார்கள். தங்க நாணயமே அதிக அள வில் பயன்படுத்தப்பட்டது.
இம்மாறுதல் தங்கத்தை பத்திரபடுத்த உற்படுத்தியது. இக்கால கட் டத்தில் மக் களிடையே திருட்டு அதிகரித்தது. அதை தடுக்க தங்க வியாபரிகளும் அடகு கடை களும் உருவாக்கப்பட்டன. மக்கள் தங்க த்தை அடகு கடைகளில் பத்திரப்படுத்தி வைத்து அதில் பெரும் சான்றிதழை நாணய மாற்றுக்கு பயன்படுத்தினார்கள்.
நாளடைவில் ஒரு குறிபிட்ட நபர்களிடையே தங்கம் அதிகரித்தது. தங்க விலையை அவர்கள் கட்டு பாட்டுக்குள் வைத்துக் கொண்டார் கள். தங்கத்தின் மேல் இருக்கும் அலாதி பிரியத்தில் மக்களும் அத னை தொடர்ந்து வாங்கிக் கொண் டிருக்கிறார்கள் அதன் விலையும் செல்லில் அடங்க ஏற்றத்தை நாடிக் கொண்டிருக்கிறது.
முக்கியமாக நம் இந்தியர்களிடை யே தங்க ஆபரணம் அணிவதை பெருமையாக நினைக்கிறார்கள். ஒரு நற்காரியங்களுக்கு வருபவர்கள் புது புது வடிவில் தங்க ஆபர ணங்களை அணிந்து வருகிறார்கள். அதை பார்க்கும் மற்றோர் நபர் தானும் அப்படிபட்ட அணி கலனையோ இல்லை அதைவிட அழகான ஆபரணத் தை வாங்க ஆசைக்கொள்கிறார்கள். தங்கத்தின் விலை அடாது ஏகிறினாலு ம் நம்மவர்கள் விடாமல் வாங்கிக் கொ ண்டுதான் இருக்கிறார்கள்.
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: