Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுமையான வாழ்வு, “சுகமாக” சில ஆலோசனைகள்

சந்தோஷம்தான் நமது இலக்கு. நாம் செய்யும் செயல்கள் எல்லாம் சந்தோஷத்துக்காகத் தான். வாழ்க்கையை சந்தோஷ மாக்கிக் கொள்ள சில விஷயங்களை நாம் கட் டாயம் செய்தாக வேண் டும். தேவையற்ற ஒன்றை சேர்த்திருப்பது அல்லது தேவையான ஒன்று இல் லாமல் இருப்பதே மகிழ்ச்சி குறைபாட்டுக்கு காரணமா க இருக்கும். எனவே தேவையானதைத் தேட வேண்டும், தேவை யற்றதை தள்ளியாக வேண் டும்.

நிம்மதியான உறக்கம் சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கியமான வழி. உடலுக்கு ஆரோக்கியமும், உற்சாகமும் தருவது தூக்கம். எந் தக் காரணத்தைக் கொண்டும் தூக்கத்தை குறைத்துக் கொள் ளக்கூடாது. தூங்கி எழுந்தால் துக்கம்கூட மாறிவிடும். குழப்ப ங்களும் நீங்கிவிடும் அந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் தூங்கும் நேரத்தில் உடலில் நடை பெறுகிறது. இரைச்சல் இல்லாத, வெளிச்சம் புகாத அமைதியான அறையில் நிம் மதியாக உறங்குங்கள். ஒவ் வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் எழுவீர்கள், வாழ்வீர்கள் என்பது நிச்சயம்.

அளவான வேலை நேரங்களில் ஈடுபடுங்கள். சிலர் வேலை வேலை யென்றும், பணம் பண மென்றும் திரிவார்கள். இதனால் மன அழுத்தம்தான் மிஞ்சும். வேலை என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். அது உங்கள் மகிழ்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும்.

வேலையில் தொடர்ந்து நெருக்கடி இருந்து வாழ்க்கையை அனுப விக்க முடியாமல் இருந்தால் அது வேலையல்ல `கஷ்டம்’. தின மும் 8 மணி நேரம் உழைக்க செலவிட் டால் 8 மணி நேரம் ரிலாக்ஸாக இரு ங்கள். 8 மணி நேரம் தூங்குங்கள்.

துன்பத்தை கண்டால் துவண்டு விடா தீர்கள். துன்பம் வந்துவிட்டால் எல் லோரும் துவண்டு போய் விடுகிறார் கள். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் சந்திக்காத துன்பமே இல் லை. அவரிடம் ஒருமுறை, `நீங்கள் இவ்வளவு துன்பத்துக்கிடையிலும் பெருமளவு சாதித்திருக்கிறீர்ர்களே எப்படி?’ என்று கேட்டார்கள்.

அப்போது அவர் `எந்த துன்பமும் மாறிவிடும்’ என்று பதிலளித்தா ர். அது தான் நிஜம். எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதா ன் இயல்பு. வாழ்வில் இன்பம், துன் பம் எல்லாம் மாறிமாறி வரும். பண மும், புகழும் அப்படித்தான்.

தேவையை நிறைவேற்றிக் கொள் ள நீங்களே களம் இறங்குங்கள். உதாரணமாக உங்களுக்கு தேவை யா னதை மற்றவர்களிடம் சொல்லி வாங்கிவரச் சொல்ல வேண்டாம். இப்படிச் செய்வது சுலபம் என்று பல ரும் எண்ணுவது உண்டு. ஆனால் அவர்கள் வாங்கி வந்தபிறகு அதில் குறைகள் இருந்தால் உங்களுக்குத் தான் இழப்பு. அதற்காக கோபப்பட்டால் உங்கள் உறவும்கூட பாதிக் கும். எனவே உங்கள் தேவையை நிறைவேற்ற நீங்களே செயல்படுங் கள். விரும்பியதை வாங்குங்கள், செய்யுங்கள், சாப்பிடுங்கள். மகிழ் ச்சி என்றும் நிலைக்கும்.

வற்புறுத்துதலுக்கு இணங்க வேண் டாம். நண்பர்களுடன் கலந்து கொ ள்ளும் விழாக்களில் மதுப்பழக்கத் தை கற்றவர்கள்தான் ஏராளம். உங்கள் நண்பர்களும் அதுபோல் `சு ம்மா சாப்பிடு’ என்று கூறி வற்புறு த்தலாம். `வா சினிமாவுக்கு போகலாம்’, `ஜாலியாக இருக்கலாம்’ என்று உங்கள் நேரத்தை வீண டிக்கலாம். எனக்காக இதைச் செய்து கொடு என்று அலைக் கழிக்கலாம். அவை அனாவசியம் என்று உங்களுக்குத் தோன்றினால் கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். அது தான் உங்கள் மகிழ்ச்சிக்கு கியாரண்டி.

உணவுப்பழக்க வழக்கத்தில் ஒழுங்கு முறையை கடைபிடியுங்கள். உணவுக் கட்டு ப்பாடு நல்லது. சத்து நிறைந்த உண வை உண்பது உடலுக்கு நலம் சேர்க்கும். கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நலமாக இருந் தால் சந்தோஷமாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு வேலைக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுங்கள். அதே போல் இருவேலைக்கு இடையே சிறிது ஓய்வெடுங்கள். காலை மாலை நேரங் களில் பார்க், கடற்கரையோரங்களில் உலாவி வாருங்கள்.

குடும்பத்தினருடனும் நேரம் செலவி டுங்கள். மகிழ்ச்சிக்கும், பாதுகாப்புக்கு ம் தான் மனிதன் குடும்பமாக வாழ ஆர ம்பித்தான். தேவைக்காக மட்டும் சகோ தரர்களை நாடுவதும், ஆசைக்காக மட் டும் மனைவியை நாடுவதும் உங்களி ன் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்வ தாகும்.

உறவுகளிடம் இனிமையாகப் பழகுங்கள். மனைவி, குழந்தைகளை அவ்வப்போது மகிழ்ச்சிப்படுத்துங்கள். சினிமா, சுற்றுலா என்று இன்ப உலா செல்லுங்கள். விளை யாட்டு, மகிழ்ச்சி என்று ஜாலியா க இருங்கள். வாழ்வே வசந்தமாக தோன்றும்.

ஒரு போதும் விரக்தியாக இருக் காதீர்கள். `எனக்கேன் இந்த சோ தனை, நான் ஏன் இவ்வளவு துன் பப்படுகிறேன், செத்துவிடலாம் போலிருக்கு’ என்று விரக்தி புல ம்பல்களை வெளியிடாதீர்கள். நெருக்கடி வரும்போது சிறிது நேரம் எந்தவித முடிவும் எடுக்காமல் அமைதியாக இருங்கள். காலம் சூழலை மாற்றி நிம்மதியை திரும்பச் செய்யும் என்று நம்புங்கள்.

நெருக்கடி நேரத்தில் பெரியவர்களின் வழிகா ட்டுதல்களை பின்பற்றுங்கள். நல்ல புத்தகங் களைப் படியுங்கள். நெருங்கிய நண்பர்களி டம் பேசுங்கள். நகைச்சுவை நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள். இதனை நீங்கள் பின்பற் றினால் இந்த உலகத்தில் உங்களைவிட சந்தோசமாக வாழக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லை.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: