Friday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பல்வேறு நோய்களை தடுக்கும் சாக்லேட்

தினமும் சிறிதளவு டார்க் சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் பல்வேறு நோய் களை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இளமை தோற்றம்

குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் விருப் பம். ஆனால் அவை பற்களை பாதிக்கும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் குழந் தைகளை சாக்லேட் உண்ண அனுமதிப்பதில் லை. மேலும் கொழுப்பை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பது பெரும் பாலானோரின் கருத்து.

ஆனால் தினமும் ஏழு கிராம் டார்க் சாக்லேட் உண்பதன் மூலம் இதயநோய் மற்றும் கேன் சரில் இருந்து காப்பாற்றிக்கொள்வதோடு இள மையான தோற்றத்தைப் பெறமுடியும்.

மனதை சுறுசுறுப்பாக்கும்

சாக்லேட்டில் காணப்படும் ஆன்டி ஆக்ஸி டன்டஸ் வயதாவதை தடுப்ப தோடு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கின்றன.

உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தின மும் சிறிய அளவில் டார்க் சாக்லேட் உண் பதன் மூலம் ரத்த அழுத்ததை குறைக்க முடியும். மேலும் உடலுக்கு தீங்கு விளை விக்கும் தேவையற்ற கொழுப்பை 10 சத விகிதம் வரை குறைக்கிறது.

இதில் உள்ள செரோடோனின் என்ற மூல ப்பொருள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்கி உடலையும் மனதையும் சுறுசுறுப் பாக்கும் ஆற்றலும் டார்க் சாக்லேட்டிற்கு உண்டு.

கோகோவின் நன்மைகள்

சாக்லேட் தயாரிக்கப் பயன்படும் கோகோவில் காணப்படும் பாலி ஃபினைல், நுரையீரல் புற்று நோய் செல்களை அழிக்கும் தன் மை கொண்டது. இந்த குணநல ன்கள் எல்லாம் சாதா சாக்லேட் டில் கிடையாது.

75 சதவிகிதம் கோகோ சேர்த்து செய்யப்பட்ட டார்க் சாக்லேட்டி ல் மட்டுமே இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளன எனவே வீட்டில் தயார் செய்யப்படும் டார்க் சாக்லேட்டை உட்கொள்வது சிறந்தது என் கின்றனர் மருத்துவர்கள்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply