Friday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மௌனத்தின் தனிச்சிறப்பு

தர்மதேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்ட தால், இக்கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்குதான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப் போது இல்லை. இனி, அடுத்த கிருதயு கம் வரும் போதுதான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இ ன்னும் பல வருடங்கள் இருக்குமாம்.
 
கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலி யுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை புராணங் களில் காணலாம். முந்தைய யுகங்களில் பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர் திண்ணையில் உட் கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசுமாட்டைக் கொல்வதற் காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழி யாக ஓடி தப்பித்துக்கொண்டது . 
 
திண்ணையில் உட்கார்ந்திருந்த வரிடம் வந்து, “இந்தப் பக்கம் ஒரு பசுமாடு வந்து போயிற்றா? என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்… பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். பசுமாடு வர வில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொ ன்ன பாவம் நமக்கு வரும் …” என்று யோசனை செய்த படி பேசாமல் இரு ந்தார்.
பசுவை தேடி வந்தவன் இர ண்டு, மூன்று தடவை கேட் டும், இவர் பதில் சொல்ல வே இல்லை. “ஓகோ! இவ ர் செவிடு போலிருக்கிறது …” என்று நினைத்து திரும்பிப் போய் விட்டான். பசு மாடு தப்பியது; தான் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தது எவ்வளவு நல்லதா கப் போயிற்று என்று சந்தோஷப்பட்டார். மௌனமாக இருப்பதும் கூட நல்லதுதான். அதிகம் பே சப், பேச அதுவே மனஸ்தாப த்தில் முடியும்.
 
அதனால்தான், சில பெரியவர் கள் மௌன விரதம் கடைப்பி டிப்பதுண்டு. இப்போது இளை ஞர்களும் இதை உணர்ந்துள் ளனர்.! வீண் பேச்சு பேசினால் தானே விரோதம் ஏற்பட வாய் ப்புண்டு. அகம் ஒன்று வைத்துக்கொண்டு புறம் ஒன்று பேசுபவர்க ளையும் ஒதுக்க இந்த மௌனம் சிறந்த வழி என்பதை அறிந்தவர்கள் நம்மிடம் கூறியது உண்டு.! இத னால் வீண் விவாதம் இருக்கா து. அதற்காக, பேசாமல் இருக்க வும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாக பேச வேண்டும்; ஆனால் சந்தர்ப்ப வாதியாக இருக்கக்கூடாது என் பதே நம்முடைய வேண்டுகோ ள் . உங்களால் முடியுமா?
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: