Monday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆரோக்கியமாக வாழ குழந்தைகளை தூக்கி வீசும் வினோத திருவிழா!

குழந்தைகள் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களை தூக்கிவீசும் வினோதமான நேர்த்திக் கடன், கர்நாடக மாநிலம், பகல்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து தூக் கி வீசுமாறு கேட்டுக் கொண் டனர். பகல்காட்டில் உள்ள கோவில் ஒன்றில், ஒவ்வொ ரு ஆண்டும் விழா நடை பெ றுவது வழக்கம். அப்போது, அங்கு கூடும் ஆயிரக்கணக் கான பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சென்று, தங்க ள் குழந்தைகளைத் தூக்கி வீசுமாறு கேட்டுக்கொள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ளை மறந்து புடைசூழ, தேர்மீது நின்ற நிலையில், குழந்தையை, தூக்கி வீசுவார் பூசாரி. அந்தரத்தில் பறந்து வரும் குழந்தைகள், அத ன் பெற்றோர்கள் விரிக்கும் துணி விரிப்பில் வந்து விழுவர். முத லில், தங்களது குழந்தைகளைத் தான் தூக்கிவீசவேண்டும் என, பக்தர்கள் போட்டி போட்டுக் கொண் டு பூசாரியிடம் மன்றாடுவர். குழந்தைகளை இவ்வாறு தூக்கி வீசுவதால், அவர்கள் நோய் நொடி யின்றி, ஆரோக்கியமாக இருப்பார் கள் என்பது, அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த நிகழ்ச்சிக்குப் பின், கோவில் வளாகத்திலிருந்து ÷ஷாபா யாத்திரையை துவங்கும் பூசாரி, அப்பகுதி கிராமங்களில் வலம் வந்து, விழாவை நிறைவு செய்வார்.

இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய‍விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍வும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: