சுவாமி நித்தியானந்தா, தனது பிடதி ஆசிரமத்தில் பணியாற்றிய பரத்வாஜ் என்பவருடன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்துக் கொண்டதாக புகார் எழுந்துள் ளது.
சுவாமி நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக உள் ள காணொளிகள் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதுதொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக் கல் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக் கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் சுவாமி நித்தியானந்தா, பரத்வாஜ் என்ற தனது உதவியாள ருடன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்துள்ளதாகவும், இதற்காக தான் வெளிநாடு செல்லும் போது பரத்வாஜையும் அழைத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் இந்த விஷயத்தை சுவாமி நித்தியானந்தா மறுத்துள்ளார். இது குறித்து ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியில், பரத்வாஜ் தொடர்பான குற்றச்சாட்டில் என் மீது துளியளவு ம் உண்மையில்லை. இதன் மீதான விசாரணையை மத்திய புலனாய்வு த்துறை எடுத்து நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்