Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோடையில் நம் பாதங்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் பராமரிக்க . . .

கோடைகாலத்தில் வியர்வை ஆறாக பெருகுவதால் உடலில் துர்நாற்றம் வீசும். அதேபோல் பாதங்களில் எழும் விரும்பத்தகாத வாசனையினால் பொது இடத்தில் இயல்பாக இருக்க முடியாது. கோடையில் வியர்வை நாற்றத் தைப் போக்க நாம் ம‌ட்டு‌ம் தூ‌ய்மை யாக இரு‌ந்தா‌ல் போதாது, ‌நாம் உபயோகிக்கும் ஷூ, செரு‌ப்பு போ‌ ன்றவ‌ற்றையு‌ம் தூ‌ய்மையாக வை‌த்‌திரு‌க்க வேண்டும். அப்பொழு து தான் நம் பாதங்களை ஆரோக் கியமாகவும், அழகாகவும் பராமரி க்க முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பாதங்களை கழுவுங்கள்

அடிக்கடி குளிர்ந்த நீரால் பாதங்களை கழுவுங்கள். இதனால் துர் நாற்றம் வீசுவது தடுக்கப்படும். பழைய ஷூ, சாக்ஸ் போன்றவைகளை மாற்றுங்கள். சில செரு‌ப்புக‌ள் ‌நீ‌ரி‌ல் ப‌ட்டது‌ம், ‌நீரை உ‌ள்‌ளிழு‌த் து‌க்கொ‌‌ள்ளு‌ம் த‌ன்மை இரு‌க்கு‌ம். அ‌ந்நீ‌ரி‌ல் செரு‌ப்பு ஊ‌றி அதனா‌ல் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌ற்படு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்ட செரு‌ப்புகளை ‌நீ‌ர் ப‌ட்டது‌ம் உடனடியாக வெ‌யி‌லி‌ல் காய வை‌க்கவு‌ம்.

உலர்வாக வையுங்கள்

‌விய‌ர்வை ம‌ட்டும‌ல்லாம‌ல் ‌நீ‌ங்க‌ள் அ‌ணியு‌ம் ‌சில பொரு‌ட்களான ஷு, சாக்ஸ் போன்றவையும் ‌ உ‌ங் க‌ள் ‌மீது துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணமாக அமையலாம். வெய் யில் காலங்களில் ஷு அணிவதை தவிர்க்கலாம். அ‌வ்வாறு அ‌ணிய வே‌ண்டிய க‌ட்டாய‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் ‌தினமு‌ம் சா‌க்ஸை துவை‌த்து‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். கூடுமானவரை பருத்தி யா‌ல் செ‌ய்ய‌ப் ப‌ட்ட சாக்ஸ் அணி வது நல்லது. மேலும் சாக்ஸ் அணி யும்முன் காலில் பவுடரை தடவவு ம். இது வியர்வையை தடுத்து காலை உலர்ந்த நிலையில் வை க்க உத வும்.

டேனின் டீ

கோடைகாலத்தில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம் வாசனைப் பொருட் கள் அதிகம் கொண்ட உணவுக ளை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற உணவுகளை உண்ணக்கூடாது . இதனால் வியர்வை மூலம் துர்நாற்றம் பரவுவது தடுக்கப் படும்.

டேனின்கள் கொண்ட தேநீரை தண்ணீரில் கலந்து 10 ஊற வைக் கலாம். பின்னர் பாதங்களை அரை மணிநேரத்திற்கு அந்த தண்ணீரில் ரிலாக்ஸ்சாக ஊறவைக்கவும். இது அதிகம் வியர்வை சுரப்பதை கட்டு ப்படுத்தும். பாதங்களை உலர்வாக வைக்கும்.

பாதங்களின் பாதுகாப்பு

வீட்டில் சிமெண்ட் அல்லது மொ சைக் தரையாய் இருந்தால் கண்டி ப் பாக காலணி அணிந்துக் கொண்டு தான் நடக்க வேண்டும்.

டெட்டாலும் (DETTOL) உப்பும் கலந்த சூடான தண்ணீரில் சோப் பைக் கலந்து பாதத்தை அதில் மூழ்கு ம்படி வைக்க வேண்டும்.

வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரி ல் உப்பை கலந்து அதில் பாதங்கள் முழ்கி இருக்கும்படி 10 நிமிடங்கள் வரை வைத்திருக்க வே ண்டும். குளிர் நேரத்தில் பாதம் அதிக குளிர்ச்சியாக உணர்ந்தால், இரவில் ‘ஆலிவ் ஆயில்’ தேய்த்து மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும்.

காலில் ஏற்படும் பித்த வெடிப்புகளு க்கு இரவில் படுக்கப்போகும் போது இலுப்பை எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவினால் பித்த வெடிப்புகள் குணமாகும்.

காலில் வீக்கம்

தூதுவளை இலைகளையும், நற்சு ங்கள் இலைகளையும் எடுத்து, சி றிது தண்ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண் டைக் காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைக ளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: