மின் பற்றாக்குறையால் தமிழகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்து ள்ளது. பற்றாக்குறையைத் தீர்க்கவிய லாமல் தமிழக அரசு தவிக்கிறது. தமிழக மக்க ளும் இந்தச் சிக்கலைக் கடந்துசெல்லும் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் அமைந்துள்ள பஞ்சாலை கள், நூற் பாலைகள் போன்ற சிறு, குறு, நடுத் தரத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியா ன மின்வெட்டால் உற்பத்தித் தேக்கம் கண்டுள்ளன. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதி ல் தொழில் வளமும் விவசாய வளமும் மிகுந்த கொங்கு மண்டல ம் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டல் லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டாலும் தமிழகத்தின் தொழில் நடத்துநர்களும் தமிழக மக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியு ள்ளனர். முறைப்படுத்தப்படாத இந்தச் சீரற்ற மின் தடையிலிருந்
து மாநிலத்தைக் காப் பாற்ற வேண்டிய முக் கியப் பொறுப்பை எப் படி அரசு நிறைவேற் றப் போகிறது என்ப தை யூகிக்க முடிய வில் லை.
பொருளாதாரரீதியான முன்னேற்றத்திற்குத் தொழிற்துறை முன் னேற்ற மும் விவசாய அபிவிருத்தியும் அவசியம். இவை இரண்டும் பெரிதும் நம்பியிரு ப்பது மின் ஆற்றலைத்தான். தமிழகத்திற்குத் தேவையான மின் ஆற்றல் ஏறக்குறைய 11,000 மெகா வாட். ஆனால் உற்பத்தியாவ தோ 8000 மெகாவாட்தான். இடைப்பட்ட 3000 மெகாவாட் மின் சாரம் தான் நமது நிம்மதி யைக் குலைத்துள்ளது; தமிழகத்தை அந்தகாரம் சூழ க் காரணமாகியுள்ளது. பற்றா க்குறையைச் சமாளிக்கத் தேவைப்படும் நடவடிக்கை களை அரசு சரிவர எடுக்க வில்லை என மார்க்சிஸ்ட், தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குற் றம் சுமத்தியுள்ளன. அரசு கையறு நிலையிலுள்ளது. இவற்றுக்கு நடுவில் மாட்டிக்கொண்ட மக்கள் தங்கள் வீட்டு, விவசாய, தொழில் உபயோகத்திற்குப் போதுமான தங்கு தடை யற்ற மின்சார த்துக்காகக் காத்திருக்கின்றனர்.
மின்வெட்டைக் கண்டிக்கும் முகமாகப் பிப்ரவரி 10 அன்று கோவை யில் முப்பத்தி ஆறு தொழிலமைப்புகளைச் சேர்ந்த ஏறக்குறைய மூன்று லட்சம் தொழிலா ளர்கள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற் கொண்டனர். இதனால் 250 கோடி ரூபாய்வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் சங்கம் சார்பாகவும் பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார் பாகவும் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடை பெற்று வருகின்ற ன. தமிழகத்தில் மூன்று ஷிப்டுகளாக இயங்கி வந்த தொழிற்துறை நிறுவனங்கள் இரண்டு ஷிப்டுகளை மட்டுமே நடத்துகின்றன அது வும் ஜெனரேட்டர் உதவியுடன். ஜெனரேட்டர் வசதிகள் இல்லாத
சிறு நிறுவனங்கள் ஒரே ஒரு ஷிப்டு உற்பத்தியைத்தான் மே ற்கொள்கிறது. டீசல் விலையும் பெருமளவில் உயர்ந்துள் ளதால் ஜெனரேட்டர் உதவியு டன் உற்பத்தி நிகழ்த்தப்படும் போது ஒரு யூனிட்டுக்குப் பதினைந்து ரூபாய்வரை செல விட நேர்வதாகத் தெரிகிறது. விவசாயத்திற்குத் தரப்படுவதுபோல் டீசல் மானியம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மின்பற்றாக்குறை மிகப் பெரும் சிக்கலாக மாறியது ஏன் என்பது முக்கியக் கேள்வி. மத்திய, மாநி ல அரசுகள் கடைப்பிடிக்கும் சந் தைப் பொருளாதாரமும் தனியா ர்மயக் கொள்கையும் இதற்கான முக்கியக் காரணங்கள். முன்பு தமிழக மின்சார வாரியம் நமக் கான மின்சாரத்தை உற்பத்தி செய்துவந்தது. மின் உற்பத்தியி ல் தனியார் நிறுவனங்கள் அனும திக்கப்பட்ட பிறகு அவற்றிடமி ருந்து மின்சாரத்தைப் பெற வே ண்டிய நிலைக்கு மின் வாரியம் வந்தது. அவை நிர்ணயித்த விலை க்கு மின்சாரத்தைப் பெற வேண்டிய நிலையால் மின் வாரியத்தின் செலவு அதிகரித்தது. கையிருப்பு சிறிது சிறிதாகக் குறைந்து அது வரையிலும் மின்மிகை மாநிலமாக இருந்துவந்த தமிழ்நாடு மெது
வாக மின்பற்றாக் குறை கொ ண்ட மாநிலமாக மாறியது. மின் உற்பத்தித் திட்டம் ஒன் று நிறுவப்பட்டு அது பயன் தரத் தொடங்க ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகள்வரை தேவை ப்படும். அதிகரித்து வரும் தேவையை மனத்தில் கொ ண்டு அதற்கேற்றபடி உற்பத் தியைப் பெருக்கத் தேவையா ன நடவடிக்கைகளில் தொடர்ந்து வந்த தொலைநோக்குப் பார்வை அற்ற அரசு கள் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்தன. கடந்த பல பத்தாண்டு களாக மாறி மாறி ஆட்சியைக் கைப்பற்றி வரும் கழகங்
கள் இரண் டுமே ஒரே விதமான மனப் போக் கைத்தான் கொண்டிருந்த ன. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒரு ஆட்சி யில் போடப்பட்ட திட்ட ங் கள் அடுத்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படாத நி லை தொடர்வ தால் இது போன்ற இன்னல்களை நாம் அனுபவிக்க வேண்டியுள் ளது.
பயன்பாட்டு இலக்கை எட்ட இயலாமல் மின் ஆற்றல் தடுமாறுகை யில் இலவசத் திட்டங்கள் என்னும் பெயரில் மின் சாதனங்களை வாரி இறைத்தது திமுக. அதே வழிமுறையை அதிமுகவும் பின் பற்றுவது ஆபத்தின் அறிகுறி. இல வசத் திட்டங்களை மக்கள் விரும் பவில்லை என்பதற்குக் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக வுக்குக் கிடைத்த பரிதாபமான தோல்வியே எடுத்துக்காட்டு.
முறையான பராமரிப்பு இல்லாத தன் காரணமாக எண்ணூர் அனல் மின் நிலையம் உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களில் ஏழு அல குகள் முழுவதுமாகச் செயலிழந்துள்ளன. பற்றாக்குறையோடு இய ந்திரக் கோளாறும் இணைந்துகொள்ளச் சிக்கலில் மேலும் சில முடிச்சுகள் விழுந்துள்ளன. மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கா மல் இயங்கத் தகுந்த பராமரிப்பும் கண்காணிப்பும் அவசியம். இதை ப் போன்ற நெருக்கடியான தருணங்களில் மின் உற்பத்தி தடைப்படுவதைத் தடுக்கா மல் அரசு வேடிக்கை பார்ப்பதற்குக் கார ணம் அதன் அலட்சியமே. தவிர நிலக்கரி யின் விலை டன்னு க்கு 45 டாலரிலிருந்து கடந்த ஐந்தாண்டுகளில் 120 டாலராக உய ர்ந்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புனல் மின்நிலையப் பராமரி ப்புச் செலவு அதிகமென்பதாலும் நீர்வசதியின்மையாலும் நீரிலி ருந்து எடுக்கப்படும் மின்சார அளவும் குறைந்துவிட்டது. மேட்டூர்
அணையிலிருந்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டிருப்ப தால் தற் போது உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து மின்சார த்தைப் பெறுவதிலும் சிக்க ல்கள் நிறைந்துள்ளன. குஜ ராத் மாநிலத்திலிருந்து யூ னிட்டுக்கு 4.20 ரூபாய் வி லையில் 500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் இருந்தும் மின்தொடர் நெருக்கடி கார ணமாக அதாவது மின்சாரச் செலுத்தீட்டுச் சரிவர அமைக்கப்படா ததால் 235 மெகாவாட் அளவிலேயே மின்சாரத்தைப் பெற்றுக்
கொள்ள முடிகிறது. மத்திய தொகுப்பிலிருந்து 2500 மெகா வாட் மின்சாரத் திற்குப் பதில் 1000 மெகாவாட் தான் வழங்கப் படுகிறது. மின் வாரியத்தின் நிதி நெருக்கடி காரணமாக மின் சாரம் வாங்கிய வகையில் காற் றாலைகளுக்குத் தரப்பட வேண் டிய கோடிக்கணக்கான ரூபாயும் ஆந்திராவிடமிருந்து மின்சாரம் வாங்கியதற்கு அளிக்கப்பட வே ண்டிய தொகையும் நிலுவையிலுள்ளன. இப்படியாக அவசியப் படும் மின்சாரத்தைத் திரட்ட முடியாமல் மின்னாற்றல் சார்ந்த பல்வேறு திசைகளிலும் நீடித்துவரும் இடர்ப்பாடுகள் தமிழகத் தைச் சூழ்ந்துள்ள இருளை அடர்த்தியாக்குகின்றன.
இத்தனை நெருக்கடியிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கா ன மின்சாரம் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. பெருமளவி ல் நிதிவச தியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் டீசல்சார்ந்து மின் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனால் அவற்றுக்கு மின்தடை விதிக்கப்படாமல் நிதி வசதியற்ற சிறுநிறுவனங்களுக்கு மின் தடையென்னும் சூழலை உருவாக்கியுள்ள அரசின் செயல் அபத்தமன்றி வேறென்ன? தமிழ கத்தின் பிற பகுதிகள் பல மணிநேரம் இருளில் மூழ்கியிரு ந்தும்,
சென்னையில் பெரிய அளவில் மின்வெட்டு இல்லாததன் கா ரணம் குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது. அரசியல் வாதிகளும் அதிகாரவர்க்கத்தி னரும் ஊடகவியலாளர்களும் குவிந்துள்ள சென்னையில் இத்தகைய மின்வெட்டு தொ டருமானால் அது அரசுக்கு மிக ப் பெரும் நெருக்கடியாக மாறு ம். ஊடகங்கள் பிரச்சினையை த் தீவிர மான தளத்திற்கு நகர்த்திச்செல்லக்கூடும். இவற்றைத் தவிர்ப்பத ற்காகவே தலைநகரில் தளர்த்தப்பட்ட மின்வெட்டு அம லாக்கப் பட்டுள்ளதாக நம்ப வேண்டியுள்ளது. தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கு இந்தப் பாரபட்சம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு மத்திய தொகுப் பிலிருந்து அதிக மின்சாரம் அளிக்கப்பட வேண்டுமென மத் திய அரசைக் கோரிய மத்திய இணைய மைச்சர் நாராயண சாமி தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையம் இக்குறை யைத் தீர்ப்பதற்காக உருவாக் கப்பட்டிருந்தும் அதற்கெழுந் துள்ள எதிர்ப்பின் காரணமாக உற்பத்தி நடைபெறா ததால் இத்தகைய நெருக்கடியை மக்கள் சந் திக்க நேர்ந்துள்ள தாகத் தெரிவித்த கருத்தில் மறைந்திருக்கும் உள்நோக்கம் வெளி ப்படையானது. தமிழகத்தின் தொழில் முனை வோர்களும் தற்போதைய பற்றாக்குறையைச் சமாளிக்கக் கூடங்
குளம் அணுமின் நிலைய உற் பத்தி அவசியம் எனக் குரலெழு ப்பியுள்ளது கூர்ந்து கவனிக் கப்பட வேண்டியது. பித்தம் தெளிய அணு சக்தி உதவாது என்பதை உணர முடியாத அளவுக்கு மக்கள் குழம் பிப் போயுள்ளனர். பொதுமக்கள் மனத்தைக் கூடங்குளம் விஷ யத்தில் ஆதரவாகத் திருப்பு வதற்காகக் கையாளப்பட்டுள் ள தந்திர மான நடவடிக்கையோ இந்த மின்வெட்டு எனச் சந்தேகம் எழுந்தாலும் அதில் முழுவதும் உண்மையில்லை. கடந்த மூன்றா ண்டுகளாகவே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. கூடங்
குளப் போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் உதயகுமார், கடந்த ஐந்தாண்டுகளாக மாநில முதல்வராக இருந்த கருணாநிதியும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த ஆர்க்காடு வீராசாமியும் தான் தமிழகத்தில் தற்போது நில வும் மின்தட்டுப்பாட்டுக்குக் காரணமென்றும் கடந்த ஆட்சி யில் தமிழ் நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அவர்கள் விளக்க வேண்டுமென்றும் நேர்காணல் ஒன் றில் தெரிவித்துள்ள கருத்தை இங்கு நினைவுகூரலாம்.
தமிழகம் மின்வெட்டில் லாத மாநிலமாக்கப்படும் எனச் சூளுரைத்து ஆட்சி யில் அமரும் கழகங்கள் பதவியிலமர்ந்தபின்பு அதைச் சுலபமாக மறந்து விடுகின்றன. இரு கழகங்க ளின் தலைவர்களும் சகிப் புத் தன்மையற்றவர்கள் என்பதோடு ஒருவர்மீது ஒருவர் பழிபோடத் தயங்காதவர்கள். 2011 ஆகஸ்டு நான்கு அன்று தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 2012 ஆகஸ்டு முதல் தமிழகத்தில் மின்வெட்டே
இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போதோ 2012 ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்பற்றைக் குறை தவிர்க்கப்பட்டு 2013 மத்தியில் முற்றிலும் இல்லாமல் ஆக்கப்படும் என்று சட்ட மன் றத்தில் அறிவித்துள்ளார் ஜெயலலிதா எனக் குறை கூறியுள் ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பழுதடைந்திருந்த குத்தாலம், வழு தூர் நிலையங்கள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டுள் ளதாகவும் வடசென்னை விரிவாக்கத் திட்டத்தின் ஒன்றாம் அல கில் பணிகள் விரைவுபடுத் தப்பட்டு ள்ளதாக வும் தேசிய அனல்மின் கழகத்துடன் இணைந்து செயல் படுத்த ப்படும் வள்ளூர் 500 மெகா வாட் மின்திட்டம் 2012 மார்ச்சிலும் இதன் இரண் டாம் அலகு 2012 ஜூனிலும் மூன்றாம் அலகு 2013 பிப்ரவரி யிலும் மேட்டூர் மின் நிலையத்தின் 600 மெகாவாட் மூன்றாம் நிலை 2012 மார்ச் சிலும் வடசென்னை அனல் மின் நிலைய இரண்டாம் அலகு 2012 அக் டோபரிலும் செயல்படத் தேவையானவகையில் பணிகள் முடு க்கி விடப்பட்டிருப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்ட சபை
யில் குறிப்பிட்டுள்ளார். இதன் கார ணமாக ஜூன் மாதத்தில் 1,950 மெகாவாட்டும் அக்டோபரில் மே லும் 600 மெகாவாட்டும் கூடுதலா கக் கிடைக்க வழிவகை செய்யப்ப ட்டுள்ளதாகவும் தெரிவித்து ள்ளார் அவர். மின்திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முந்தைய திமுக அரசு தவ றியதே இப்போதைய பற்றாக்கு றைக்குக் காரண மெனத் தன் பங்கு க்குத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. அவர் குறி ப்பிட்டுள்ள 2013 ஜூன் வரை மின்வெட்டு கண்டிப்பாக நீடிக்கும் என்பது மட்டுமே நமக்கான குறிப்பு.
மின்சாரத்தைப் பொறுத்தவரை எட்டுத் திக்கும் மதயானை சூழ் ந்துள்ள நிலைமைதான். இதிலி ருந்து தப்புவது எளிதல்ல. இச்சிக்கலிருந்து விடுபடத் தே வையான தீர்வில் அனைத்துத் தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். ஊர்கூடி இழுக்க வே ண்டிய தேரை யாரோ ஒருவர் நிலைநிறுத்திவிட இயலாது. சூரிய சக்தியால் மின்சார உற்பத்தி செய்யும் வழிமுறைகள் குறித்து அரசு அக்கறை யோடு ஆ லோசிக்க உகந்த தருணம் இது. அதிகரிக்கப்பட்ட மின் உற்பத்தி என்னும் இலக்கை அடையும்வரை பற்றாக்குறையைச் சமாளிக்க சிக்கனம் கைகொடுக்கும் என்பதை நாம் உண்மையாக வே நம்ப
வேண்டும். எல்லாவற்றுக்கும் அரசுமீது பழிபோட்டுவிட் டுக் குடிமைச் சமூகம் ஒதுங்கிக்கொள்ள முடியாது. ஜனநாயக அர சின் செயல்பாட்டில் மக்கள் ஒத்து ழைப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். மின் சிக்கன நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அதைத் திற ந்த மனத்துடன் புரிந்துகொள்ள நாம் தயாராக வேண்டும். சின்னச் சின்னதாக நாம் மேற்கொள்ளும் மின்சேமிப்பு பெரிய அளவில் உதவும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்சார த்தை விரயமாக்கும் பண்பாட்டிலிருந்து நாம் எல்லோருமே மீண்டு வர வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் கடமையில் ஒவ் வொரு தனி மனிதனுக்கும் பங்கு உள்ளது. வெறு மனே அரசியல் கட்சிகளையும் மின்வாரிய அதிகாரிகளையும் மட்டும் குறை கூறி க்கொண்டிருந்தால் நமது வீடும் மாநிலமும் மேலும் மேலும் இரு
ளில் மூழ்க நாமும் மறை முகக் காரணமாகி வி டு வோம்.
அந்தமாதிரி ஏதும் நடக்கா மல் இருக்க இன்றிலிருந்தே மின்சாரத்தை சேமிக்க ஆரம்பிப்போம்; இருளில்லா வாழ்க்கை வாழ்வோம் என்று நாம் அனைவரும் முடிவெடு த்தால் அதன் பலனை நாம் கண்கூடா பார்க்கலாம்!
நன்றி: செல்லப்பா, காலச்சுவடு