தேவையான பொருள்கள்:
தயிர் – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை – 4,5 இலை
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 1/2
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
விரும்பினால்..
வெள்ளரி – 1 துண்டு
கேரட் – 1 துண்டு
மாங்காய் – 1 துண்டு
செய்முறை:
புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக் கொள் ளவும்.
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்த மல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட், மாங்காய் எல்லாவற்றையு ம் மிக்ஸியில் அரைத்து அத்துடன் மீதம் இருக்கும் ஒரு கப் தண்ணீரை ச் சேர்த்து நன்கு டீ வடி கட்டியில் வடிகட்டவும்.
வடிகட்டிய நீரையும் மோரோடு சேர்த்துக் கொள்ளவும்.
மேலே உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
மாங்காய் இல்லாவிடில், தேவைப் பட்டால் சிறிது எலுமிச்சம் பழச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.
* பொதுவாக எல்லா வேலைகளுக்கும் அம்மி ஆட்டுரல் என்று பழைய பொருள்க ளை நாடினாலும், தயிர் கடைவதில் மட்டும் மத்தை விட மிக்ஸி மிக மிகச் சுவையான மோரைக் கொடுக்கும்.
* வெயில் காலத்தில் இதைத் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொ ண்டால் மதிய வேளைகளில் தேவைப்படும் பொழுதெல்லாம் எடு த்துக் குடிக்கலாம். ஆடை நீக்கிய தயிர் அல்லது வெண்னை எடுத்த மோர் என்றால் நலம்.
– Ravichandran Ramani on Facebook