Monday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் முதலீடு செய்வது எப்ப‍டி?

என்னதான் வெளிநாட்டில் வசித்தாலும், முதலீடு என்று வந்து விட்டால் சொந்த நாட்டிலேயே செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா நாட்டு மக்களிடமும் உண்டு. இந்திய மக்களும் இதற்கு விதிவில க்கில்லை. வெளிநாட்டினர் இந்தியா வில் முதலீடு செய்ய பல தடைகள் உண்டு. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை எந்தத்தடையும் இல்லை. அனை த்து வெளிநாட்டு இந்தியரும் எல்லா மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய லாம்.

என்ன தேவை?

இந்தியாவில் இருப்பவர் களுக்கு என்ன தேவையோ, அதேபோன்ற ஆவணங்கள்தான் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கும் தேவை.

ஆனால், சிற்சில வித்தியாசம் உண்டு. முதலில் அவர்களுக்கு என்.ஆர்.இ. அல் லது என்.ஆர்.ஓ. அக்கவுன்ட் தேவை ப்படும். இது தவிர, பான் கார்டு தேவைப்படும்.

கே.ஒய்.சி. படிவத்தை ஏற்கெனவே கொடுத்திருந்தால் பிரச்னை இல்லை. ஒருவேளை முதல் முறையாக முதலீடு செய்பவராக இருந்தால் கே.ஒய்.சி. படிவத் தை தரவேண்டும். அதற்கு வெளிநாட்டில் உங்களது இரு ப்பிடச் சான்றிதழ், பாஸ்போர் ட், உங்களது புகைப்படம் போன் ற ஆவணங்கள் தேவைப்படும். இவற்றை தந்த பிறகு அனைத் துவிதமான ஃபண்ட்களிலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.

எப்படி வாங்குவது?

ஆன்லைன் சேவை கொடுக்கும் நிறுவனங்கள் மூலமாகவும் வாங் கலாம், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தும் வாங்கலாம்.

எப்படி விற்பது?

விற்பதற்கான விண்ணப்பதை கொ டுத்தவுடன் காசோலை அல்லது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். முதலீடு செய்த தொ கை இந்திய ரூபாயாகவே திருப்பித் தருவார்கள்.

வரி எப்படி?

குறுகிய காலத்தில் பணத்தை எடுக்கும்போது குறுகிய கால மூல தன ஆதாய வரி உண்டு. அந்த வரியைப் பிடித்தம் செய்துதான் நமக்குத் தருவா ர்கள்.

யார் நாமினி?

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்தக்காரர்களில் யாராவது ஒருவரை அல்லது இன்னொரு வெளி நாட்டு இந்தியரை கூட நாமினியாக நியமிக்கலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாமே!

 

-வா.கார்த்திகேயன், விகடன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: