1633 – ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய் யப்பட்டனர்.
1927 – ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களு க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1955 – ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலி யோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப் பட்டது.
1981 – முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோ டம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது.
1983 – பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருது களை வென்றது
2007 – இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றி கரமாகப் பரிசோதித்தது
2012 – இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவு கோளில் 8.9-ஆகப் பதிவானது.
– செந்தில்குமார் ரங்கராஜன்