Saturday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மயங்கினேன் தயங்கினேன் – வீடியோ

[ம‌யங்கினேன் தயங்கினேன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் எடுக்க‍ப்பட்ட‍ புகைப்படங்கள், டிரைலர் மற்றும் திரை க்குப் பின்னால் நடைபெற்ற‍ காட்சி இதில் உண்டு]

“மயங்கினேன் தயங்கினேன்” என்ற திரைப்படத்தை தாய்மண் திரையகம் சார்பில் தயாரிக்கிறது.. ஒரு மனநலவிடுதியில் நடக்கும் பாலுறவு வன்முறைகளை வெளிக் கொண்டு வரும் விதமாக படத் தை உருவாக்கி வருகின்றனர்.  இன்பா படத்தை இயக்கிய எஸ். டி. வேந்தன். சமூக அவலத்தை தோலு ரிக்கும் படமாகவும் உருவாகி வரும் இப் படத்தில் நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாக நடிக் கிறார். அவருக்கு ஜோடி தமிழ்ப் படம் புகழ் நடிகை திஷா பாண்டே. இன்னொரு கதாநாயகனாக தருண் சத்ரியா நடிக்கிறார். இவர்களு டன் கஞ்சா கருப்பு, தேஜாஸ்ரீ, அஜய் ரத்னம், டிபி கஜேந்திரன், புதுமுகம் பாலா, என நட்சத்திரங்களின் பலர் நடிக்கிறார்கள்.

மேலும் ரசிகர்களை கிறங்கடிக்கும் விதமாக‌ ஒர் அட்டகாசமான குத்து ப்பாடலுக்கு ரேணிகுண்டா திரைப் படத்தில்  நடித்த சஞ்சனா சிங் ஆடியுள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப் படத்தின் சூட்டிங் நடத்தி முடித்துள்ள‍னர்.  விரைவில் திரைக்கு வர விருக்கிறது. (Stills By Bala)

Movie Trailer

Behind the Scenes

Leave a Reply