Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஜய் ரசிகர்கள் இசையமைத்து வெளியிட்ட‍ “த‌ளபதி” ஆந்தம் இசை ஆல்பம்!

த‌ளபதி ஆந்தம்

இசை ஆல்பம் வெளியீடு!

நேற்று (11-04-2012) மதியம் மதியம் 12 மணிக்கு தளபதி ஆந்தம் என்ற இசை ஆல்பத்தை நடிகர் விஜய் வெளியிட சரிகம்பதநி நிர்வாகி ராஜா பெற்றுக்கொண்டார்.

விஜய் ரசிகர்கள்

விஜய்யின் தீவிர ஆன்லைன் ரசிகர்கள்பத்து பேர் கொண்டு குழு தளபதி ஆந்தம் என்ற ஆல்பத்தை தயார் செய்தார்கள். வட்சன் என்பவர் தலைமையில் உருவாக்க‍ப்பட்ட‍ இந்த ஆல்பத்தை இவர் களே அமைத்து, இசையமைது வெளியிட்டிருக்கிறார்கள். “தலை வா, அவர் தலைவா” என்ற வெஸ் டர்ன் ஸ்டைலில் அமைந் திருக்கும் இந்தப் பாடல் விஜய் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்திரு க்கிறது. தளபதி ஆந்தம் ஆல்பம் நிச்ச‍யம் உலகளவில் விஜய் ரசிகர் களை கவரும் என்று பேசினார் வட்சன்

சரிகம்பதநி நிர்வாகி ராஜா கூறும்போது, இந்தியாவிலேயே ரசிகர்கள் இசையமைத்து வெளியிட்ட‍ முதல் ஆல்பம் இதுதான் என்றார்.

நடிகர் விஜய் பேசும்போது

நடிகர் விஜயர் பேம்போது ரசிகர்களுடைய ஆர்வம் என்னை மிகவும் கவர்ந்தது. கமர்ஷியல் கண்ணோ ட்ட‍த்தில் இல்லாமல் எல்லோரும் ரசிக்கும் விதத் தில் இந்த ஆல்பத்தை தயாரித்தி ருப்ப‍து எனக்குப் பிடித்திருந்தது. இதை வெளியிடப் போகிறோம் என்று மிகவும் ஆர்வத்துடன் என்னிடம் கேட்டார் கள். அதை மறுக்க‍ முடியவில்லை. அவர்களின் ஆர்வத்திற்காக ஒப்புக்கொண்டேன். இந்த ஆல்ப த்தை உருவாக்கிய வாட்சன், தினேஷ், பாலாஜி மற்றும் அந்தக் குழுவினருக்கு என்று பாராட்டுக்கள்

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் பரிசு

ன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் களுக்கு தேர்வு நிறைவடைந்திருக் கிறது. பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கு தேர்வு நடைபெற்று வருகி றது. இந்த வருடத்தில் இருந்து மாவட்ட‍ந்தோறும் முதல் மதிப் பெண் பெறும் மூன்று மாணவர்க ளையும் அவர்கள் குடும்பத்தினரை யும் சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்தும், பரிசும் வழங்க இருக்கிறேன். என்று விஜய் பேசினார்.

செய்தி & புகைப்படங்கள் : பாலா

விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: