பசிபிக் பெருங்கடலின் தென் மே ற்குப் பகுதியில் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் அஸ்தி ரேலியாவின் தெற்குப் பகுதி யும், அதையொட்டிய நாடுகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என குவின்ஸ்லாந்து பல் கலை கழகம் கேட்டுக் கொண்டு ள்ளது. 19-வது நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இப்பகுதியி ல் கடலில் நீர்மட்ட அளவு உயர்வது பிற இடங்களைவிட வேக மாக இருக்கிறது.
உலக அளவில் கடல் நீர்மட்டம் 1880ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 1.5 மில்லி மீட்டர் அளவு தான் உயர்ந்து இருந்தது. ஆனால் டாஸ் மேனியா நகருக்கு அருகில் நடத்திய கணக்கெடுப்போ 1900 முதல் 1950-ம் ஆண்டுக்குள் இப்பகுதியில் ஆண்டுக்கு 4.2 மில்லி மீட்டர் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பதாகக் காட்டுகிறது. டாஸ்மேனி யா அருகில் கடல் நீர்மட்டம் தொடர்ந்து 6,000 ஆண்டுகளாக ஒரே அளவில் நிலையாக இருந்திருக்கிறது. ஆனால் 1880ம் ஆண்டுக்கு ப் பிறகுதான் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியிருக்கிறது.
புவியின் வெப்ப சராசரி உயர்ந்து பனிப் பிரதேசங்களில் பனிம லைகள் உருகத் தொடங்கியதை அடுத்து கடல் நீர்மட்டம் பசிபி கி ல் உயரத் தொடங்கியது. இதன் வேகம் அதிகமாக இருக்கிறது. துரு வப் பிரதேசங்களில் மிகப்பெரிய பனிப்பாறைகள் உடைந்து உருக த் தொடங்கியிருப்பதை நேரிலேயே பார்க்க முடிவதால் நீர்மட்டம் உயர எது காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் புவி வெப் பமடைவது இதே அளவு தொடர்ந்தால் அது பருவ நிலைகளை மட்டும் அல்லாமல் கடல் நீர்மட்டங்களையும் பாதிக்கச் செய்யும் என்பதை ஆய்வு தெரிவிக்கிறது. இப்போது பருவ நிலைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்குக் காரணம் மனிதர்கள் தான் என்பதா ல் இந்த எச்சரிக்கை அரசுகளுக்கும் மக்களுக்கும் விடப்பட்ட எச்சரி க்கையாகவே கருதப்பட வேண்டும்.
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.