Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 14, இதே நாளில் . . .

1891 – அம்பேத்கர், இந்திய சட்ட நிபுணர் (இ. 1956) பிறந்த நாள்

1950 – ரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி (பி. 1879) நினைவு நாள்

1894 – தொமஸ் எடிசன் ஒளிப்படங்களைப் பாவித்து அசையும் படக்காட்சியை காட்டும் கினட்டஸ்கோப் (kinetoscope) என்ற அசையும் ஒளிப்படக்கருவியை காட்சிப்படுத்தினார்.

1986 – மேற்கு பெர்லினில் ஏப்ரல் 5 இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கப் படைவீரர் இறந்ததற்குப் பழி வாங்கும் முகமாக அதிபர் ரொனால்ட் ரேகன் உத்தரவின் பேரில் ஐக்கிய அமெரிக்கா லிபியாவில் குண்டுவீச்சை நிகழ்த்தியதில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1986 – வங்காள தேசத்தில் 1 கிகி எடையுள்ள பனிக்கட்டி மழை பொழிந்ததில் 92 பேர் கொல்லப்பட்டனர்.

1988 -சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவில் ஐநா அவையில் இடம்பெற் ற நிகழ்வில் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளைத்திரும்பப்பெறும் உடன்பாட்டில் கைச் சாத்திட்டது.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: