Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கவியரசு கண்ண‍தாசனுக்கு” அதிர்ச்சியைக் கொடுத்த‍ “களிமண்” (முழுசா படியுங்க)

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞ ரின் பெயராலேயெ “கண்ணதாசன் சாலை” என்று அழைக்கபடுகிற து.)

வீட்டு சுவர்களில் தரையி லிருந்து ஒரு அடி உயரத்தி ல் சுவிட்ச் பாயி ண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுக ளும் பொருத்தும் பழக்கம் அறிமு கமாகியிருந்த நேரம் அது. குளிப்ப தற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண் டிருந்த கவிஞர், அப்போது தான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த் தார்; பார்த்ததும் திகைத்தார்.

“இவ்வளவு தாழ்வாக சுவிட்ச் போர்டும், ப்ளக் பாயிண் ட்டும் இருந்தால் குழந்தைகள் தவழ்ந்து விளையாடும்போது, ப்ளக் பாயி ண்ட்டுக்குள் விரலை விட்டு விட்டால் அது குழந்தை யின் உயிருக்கே அல்லவா உலை வைத்து விடும்?” கவிஞர் உலவியபடி யே சிந்தித்தார்.

தோட்டத்திலிருந்து கொஞ்சம் களிமண்ணை எடுத்து, தண்ணீர் விட்டுக் கலந்து நன்றாக உள்ளங்கையில் வைத்துக் குழைத்தார். பின்னர் அதை அப்படியே ப்ளக் பாயிண்டில் இருந்த ஓட்டைக்குள் திணிக்க முயன்றார்.

அவ்வளவுதான்…

“அம்மா” என்று ஒரு அலறல். கண்ணதா சன் அலறினார்.

மின்சாரம் ‘சப்ளை’யாகிக் கொண்டிருந் த ப்ளக் பாயிண்ட், ஈரக் களி மண்ணை உள்வாங்கிக்கொண்டு, அதை உள்ளே திணித்த கவிஞரு க்கு “ஷாக்” கொடுத்து தூக்கி எறிந்துவிட்டது.

கவிஞரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது, கவி ஞர் ஹலில் மல்லாந்து மயங்கிக்கிடந்தார்.

ல்லவேளை! கவிஞரின் உயிருக்கொன்றும் ஆபத்து ஏற்படவி ல்லை.

சொல்லும் ‘பொருளின்’ மீது நொடியில் பாட்டெழுதும் புலமை பெற்ற அந்தப் பிற விக் கலைஞருக்கு, மின்சா ரம் பாய்ந்து கொண்டிருக்கு ம்போது, அதில் தண்ணீர் பட்டால் “ஷாக்” அடிக்கும் என்ற சாதாரண விஷயம் அந்தச் சூழலில் ஞாபகம் வராதது ஆச்சரியம் தான்.

தகவல் – சுபாசுந்தரத்தின் “ஆல்பம்” (சிமுலேஷன)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: