Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல் நாள், ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் – நடிகை த்ரிஷா

முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரஜினி ரசிகை நான். இப் போதும் அவரப் படத்தை அதே மன நிலை யில் தான் பார்க்கிறேன், என்று கூறியுள் ளார் நடிகை த்ரிஷா. த்ரிஷா இப்போது இருதமிழ்ப் படங்களில் நடிக்கிறார். விஷாலுடன் சமரன் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். தெலுங்கில் அவரது புதிய படம் தம்மு வெளியாகிறது. இதையொட்டி அவர் கூறுகையில், “உலகிலேயே எனக்கு பிடித்த இடம் சென்னைதான். சென்னை எனது தாய் வீடு. இங்கு நான் விரும்பாத இடங்களே கிடையாது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை. அதில் பயணப்படும் போது சொர்க்கத்தில் இருப்பதுபோல் ஒரு பீலிங் இருக்கும். அங்குதான் எனக்கு பிடித் தமான ரிசார்ட்கள் உள்ளன. அடிக்கடி அந்த சாலையில் பயணிப்ப தை விரும்புவேன். நான் வளரும்போது தமிழ் சினிமாவை அதிகம் தெரியாது. மாடலிங்கில் ஈடுபட்ட பிறகுதான் திரையுலகுக்கு நெருக் கமானேன்.

திரையுலகுக்கு வருவதற்கு முன்னால் சினிமாவில் எனக்கு தெரிந்த மூன்று பேர் ரஜினி, கமல், மணிரத்னம் மட்டும்தான். வீட்டிலும் அவர்களின் படங்களை பார்க்கத்தான் அனுமதிப் பார்கள். அதிலும் முதல் நாள் ரஜினி படங்களை பார்த்த அனுபவங்கள் மற க்க முடியாதவை. இப்போது நடிகை யாகி விட்டதால் முன்பு மாதிரி முதல் ஷோவில் ரஜினி படங்களை பார்க்க முடியாது. ஆனால் அதற்கும் முன்பே ப்ரிவியூ ஷோ பார்ப்பேன். ஆனால் நான் எங்கே அவர் படத்தைப் பார்த்தா லும் ஒரு ரஜினி ரசிகருக்கு இருக்கும் உணர்வுகளுடனேயே அவரது படங்க ளைப் பார்க்கிறேன். ரஜினியை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா என உலகம் முழுவதும் தெரியும். அவர் இங்கு வசிப்பதால் சென்னையை யும் வெளிநாட்டினர் தெரிந்து வைத்துள்ளனர்.

இந்தியா பற்றி அவ்வளவாக தெரியாத பலர் ரஜினியை நன்றாக தெரி ந்து வைத்துள்ளனர். வெளிநாடுகளில் நம்மிடம் அவர் பெயரைச் சொல்லி, அவர் வசிக்கும் ஊரிலிருந்து வருகிறீர்களா என்று கேட்கும்போது உண் மையிலேயே பெருமையாக இருக்கும். எனக்கு தமிழ் ரசிகர்களை மிகப் பிடிக்கும். அவர்கள் தலையில் மட்டமான எந்த விஷ யத்தையும் திணிக்க முடியாது. நல்ல படங் களை மட்டுமே பார்க்கின்றனர். திறமையி ருந்தால் புதுமுக நடிகர்களையும் ஊக்கப் படு த்துகின்றனர். காரணமிருந்தால் தவிர, ஹீரோக்களைப் பாராட்டுவதில்லை. தெ லுங்கு மொழியில் இதைப் பார்க்க முடியா து. அங்கே ஹீரோக்களை அப்படி துதிக்கி றார்கள்!,” என்றார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: