Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (15/04) இனக்கவர்ச்சியில் விழுந்த நீ . . .

அன்புள்ள அம்மாவுக்கு —

வாழ்வில் முக்கியமா ன முடிவு எடுக்க முடி யாமல், தவித்துக் கொ ண்டிருக்கும் உங்கள் மகன் எழுதுகிறேன். என் வாழ்வில் ஏற்பட்ட வலிகளை விரிவாக எழுதுகிறேன். நான் தங்களிடமிருந்து ஒரு நல்ல முடிவை எதிர் பார்க்கிறேன்.

நான் பிளஸ் 2 படித்து கொண்டிருந்த போது, என்னுடன் டியூஷனில் படித்த ஒரு பெண், என்னைப் பற்றி அடிக்கடி விசாரிப்பதாகவும், அடிக்கடி பார்ப்பதாகவும் கூறுவர்; நான் நம்பவில்லை. ஆனால், என் மனம் அவளை விரும்பியதை, டியூஷன் இறுதி நாளில்தான் தெரிந்து கொண்டேன். மனம் முழுவதும் அன்று முதல் ஆரம்பித்தது வலி. என் நண்பர்களின் உதவியுடன், அவள் வீட்டையும் கண்டுபிடித்தேன். அன்று முதல், அவளை பார்ப்பதற்காக, அடிக்கடி அவள் ஊருக்கு செல்வேன்.

சில முறை பார்த்தேன், பலமுறை பார்த்ததில்லை. இப்படியாக ஒரு வருடம் முடிந்து விட்டது. நான் எங்கள் ஊரிலேயே அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கிறேன். அவள் ஒரு தனியார் கலைக் கல் லூரியில் படிக்கிறாள். தினமும் கல்லூரி பஸ்சிலேயே சென்று வரு வாள். அதனால், தினமும் அவளைப் பார்க்க செல்வேன். அப்போதெ ல்லாம், அவள், என்னைப் பார்த்து கொண்டே செல்வாள். அவளின் பார்வையின் அர்த்தம், காதல் என்று தான் நினைத்துக் கொண்டி ருந்தேன்.

ஒருநாள் அவளிடம், என் காதலை சொன்னேன். அதற்கு அவள், “எங்கப்பாவுக்கு தெரிஞ்சா, என்னைக் கொன்று போட்டுடுவாரு…’ ன் னு சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலு ம், நான் அவளைப் பார்ப்பதை நிறுத்தவில்லை. ஒருநாள் அவள், எங் கள் டியூஷன் ஆசிரியரிடம் கூறி விட்டாள். அவர் என்னை அழைத்து, மிகவும் அமைதியாக, காதல் என்ற வார்த்தையை கூட உபயோகப் படுத்தாமல், “நம் குடும்பம் உள்ள நிலையில், இப்போதைக்கு வேண் டாம். நீ நல்லா படித்து, ஒரு நல்ல நிலைமைக்கு வா! நானே உனக்கு எல்லா உதவியும் செய்கிறேன்…’ என்றார்.

மேலும், அதுவரை அவளைப் பார்க்க செல்லக் கூடாது என்றார்; நா னும் சரி என்றேன். அன்று முதல், நிம்மதியாக இருக்க முடியவில் லை. நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும், என்னுள் வலிதான். இப்படியாக ஒரு வருடம் ஓடி விட்டது. இருந்தா லும் அவளைப் பார்க்க வேண்டும் என்றே தோன்றியது. விதி இருந் தால், எங்கள் ஊர் தேர் திருவிழாவில் பார்த்து விடலாம் என்று முடி வு செய்தேன்; அந்த நாளும் வந்தது. அதே நாளிலேயே அவளைப் பார்த்தேன்.

அவளும் என்னை திரும்பி, திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். தொடர்ந்து, மூன்று நாட்கள் திருவிழாவில் பார்த்தேன். அன்று முதல், என் ஆசிரியரின் வார்த்தையை மீறி விடுவேனோ என்ற பயம் வந்து விட்டது. அதே சமயம், என் அப்பா எங்களுக்காக உழைப்பதை பார்க்கும் போது, “எனக்கு தேவைதானா இது?’ என்று தோன்றுகிறது. ஆனால், அவள்தான் என் வாழ்க்கை என்று, என் உள்மனம் சொல் லிக் கொண்டே இருக்கிறது. எனக்கு அவளும் வேண்டும், என் குடும் பமும் வேண்டும். இந்த வயதில், உள் எழும் ஆசைகளால், நண்பர் களுடன் அந்த மாதிரியான படம் பார்க்க நினைத்தால் கூட, அவளுக் கு துரோகம் செய்கிறேனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனா லேயே, அதிக நேரம் நண்பர்களிடமிருந்து விலகி, தனிமையையே விரும்புகிறேன்.

ஒரு தாயிடம் கூட சொல்ல முடியாத விஷயங்களை உங்களிடம் கூறியுள்ளேன்.

என் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கான பதி லைக் கூறுங்கள்.

1. அவள் என்னைப் பற்றி, எப்போதாவது நினைப்பாளா?
2. அவள் என்னை காதலிக்கிறாளா, இல்லையா?
3. ஒரு நல்ல நிலைக்கு நான் வந்த பிறகாவது, அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா?
4. நான் அவளைப் பார்க்கப் போகாமல் இருப்பது சரியல்ல என்று, என் நண்பர்கள் கூறுகின்றனர். நான் செய்வது சரியா, தவறா? தயவு செய்து, என் உயிரை குடித்துக் கொண்டிருக்கும் இந்த வினாக்களு க்கு விடையையும், என் வாழ்விற்கு ஒளியையும் கொடுங்கள் அம்மா!

— இப்படிக்கு மகன்.

அன்புள்ள மகனுக்கு —
நீ, 12ம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்காக, சிறப்பு பயிற்சி மேற்கொண்டி ருந்த போது, ஒருத்தியை பார்த்தாய்; அவளும் பார்த்தாள். பின், அவ ளது ஊருக்கே சென்று, அவளை சில முறை பார்த்தாய்; அவளும் பார்த்தாள். இருவரும் கல்லூரி படிப்புக்கு தாவிய பின், பஸ்சில், தினம் தினம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டீர்கள். ஒருநாள் அவளிடம் நீ காதலை சொல்ல, அவளோ எங்கப்பாவுக்கு தெரிஞ்சா, கொன்றே போட்டு விடுவார் என்றிருக்கிறாள். தொடர்ந்து, நீ டியூ ஷன் படிக்கும் ஆசிரியரிடமும், உன் துர்நடத்தை பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறாள். மூன்று நாள் திருவிழாவிலும், அவளையே பார்த்துவிட்டு வந்திருக்கிறாய்.

நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடுபவர்கள், ஓட்டத்தின் இடையில் கை குலுக்கிக் கொள்வரா? ஓட்ட தளத்தின் மீதான பார்வையை வில க்கி, ஒருவரையொருவர் விழுங்கும் நரமாமிச பார்வை பார்த்துக் கொள்வரா?

நீ பிளஸ் 2 படிக்கும் போது, எதற்கு டியூஷனுக்கு சென்றாய்? ஒழுங் காக படிக்காதவன், டியூஷன் படித்தாவது நல்ல மதிப்பெண் வாங்க ட்டுமே என்று தானே, உன் பெற்றோர் டியூஷனுக்கு அனுப்பியி ருப்பர்?

இனக்கவர்ச்சியில் விழுந்த நீ, பிளஸ் 2வில், குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பாய். அதனால், உன் பெற்றோர், உன்னை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்த்திருக்கின்றனர். பெண்ணாசையின் முதற் கட்டமே, உன்னை பல படிக்கட்டுகளுக்கு கீழே குப்புற தள்ளிவிட் டிருக்கிறது.

நீ காதலிப்பதாக நினைக்கும் பெண், மிக எச்சரிக்கையானவள். முத லில் தன் கண்டிப்பான அப்பாவைப் பற்றி கூறி, உன்னை உஷார் படுத்தியிருக்கிறாள். தொடர்ந்து டியூஷன் வாத்தியாரிடம் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அவளுக்கு உன்மேல் காதல் இல்லை என்றா ல், அவள் ஏன் உன்னை தொடர்ந்து பார்த்தாள் என்பாய். ஒவ்வொரு ஆணுக்கும், ஒவ்வொரு பெண்ணுக்கும் பருவ குறுகுறுப்பு உண்டு. ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்த்தால், அந்த பெண், அந்த ஆணை குறுகுறுப்பு நிமித்தம் பார்க்கிறாள். பிரச்னை இல்லை. பார்வை – பரிச்சயம் – நட்பு – காதல் – கல்யாணம் என்ற ஏறுவரிசையை மனதில் வைத்து, எந்தப் பெண்ணும், எந்த ஆணையும் பார்வைக்கு பார்வை பார்ப்பதில்லை.

ஒழுங்காக படித்திருந்த அவளை, காதல் பார்வை பார்த்து, சல னப்படுத்தி விட்டாய். இது மாதிரி எத்தனைப் பெண்களை காதல் பார் வைகளால் சலனப்படுத்தியிருக்கிறாய் – மறைக்காமல் சொல்.

“அவள், என்னைப் பற்றி எப்போதாவது நினைப்பாளா?’ எனக் கேட்டி ருந்தாய். பொருத்த மற்ற வயதில் காதல் என பிதற்றி, அவன் வாழ்க் கையையும், நம் வாழ்க்கையையும் கெடுக்கப் பார்த்தான். அப்பா டா… தப்பித்தோம் என நிம்மதி பெருமூச்சு விடுவாள்.

“அவள் என்னைக் காதலிக்கிறாளா இல்லையா?’ என கேட்டிருந் தாய். அவளுக்கும், அமெச்சூர் காதல் இருந்திருக்கக் கூடும். அந்தக் காதலை புறந்தள்ளிவிட்டு அவள், தன் படிப்பில் கவனம் செலுத் துகிறாள். அவளது செய்கை, நீயும் உன் அமெச்சூர் காதலை புறந் தள்ளி, படிப்பை கவனி என, சொல்லாமல் சொல்கிறது.

“நல்ல நிலைக்கு நான் வந்த பிறகாவது, அவள் என்னை ஏற்றுக் கொள்வாளா?’ என கேட்டிருக்கிறாய். நீ நல்ல நிலைக்கு வர, ஆறு வருடங்கள் ஆகும். அப்போது நீ எங்கிருப்பாயோ, அவள் எங்கிருப் பாளோ? ஒரு விஷயத்தில், உத்தரவாதம் என்னால் கொடுக்க முடி யும். நல்ல நிலைக்கு இருவரும் வந்தால், இருவருக்கும் தனி, தனி யாக நல்ல வாழ்க்கைத் துணைகள் அமையும்.

“நீ அவளை பார்க்க போகாமல் இருப்பது சரியல்ல…’ எனக் கூறும் நண்பர்கள், வெளியூர் குளத்தில் முதலை இருக்கிறதா என பார்க்க, உன் காலை விடச் சொல்கின்றனர்; அவர்களிடமிருந்து விலகு.

நீ செய்வது சரியா, தவறா என கேட்டிருந்தாய். லட்சம் சதவீதம் தவ று.

படிக்கும் வயதில் படி. வேலைக்கு போகும் வயதில் வேலைக்கு போ. திருமணம் செய்து கொள்ளும் வயதில் திருமணம் செய்து கொள்.

மராத்தான் ஓடி தங்கம் பெறும் தகுதியுள்ளவன், 50 மீட்டர் சாக்குப் பை ஓட்டம் ஓடி, அரையணா சான்றிதழ் பெற மாட்டான். புரிகிறதா மகனே?

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

 • எல்லாவற்றிற்கும் ஒரு வயது உண்டு .
  டென்த் படிப்பதற்குள் காதல் என்று பேசுவதைப் போல ஒரு தவறான வாழ்க்கை அணுகுமுறை ஏதும் இல்லை..
  இவ்வாறு நினைக்குமுன் நமக்கு நம்மைப் பேணிக்கொள்ள முடியுமா என்று நினைக்க வேண்டும்..
  உழைத்துக் கொட்ட தந்தையும் ,உணவளிக்க ஒரு தாயும் இருக்கும் போது பொறுப்பை உணராமல் நடந்து கொள்ளுவது வருந்தத் தக்கது .
  நம்மைப் பேணிக்கொள்ள வழி இல்லாத போது, இன்னொருவரைக் காப்பாற்ற முடியுமா என்று சிந்திக்க வேண்டும் .
  வாழ்க்கையில் பணம் இன்றியமையாதது .அதைப் பெற கல்வி வேண்டும் .
  பணம் இல்லாதவனை உலகம் மதிக்காது , தாய் தந்தை உட்பட ..
  இந்த உண்மையை புரிந்து கொண்டு படித்து உயர்வதில் நாட்டம் செலுத்துவது நன்று .
  மேலும் காதல் என்பது வாழ்க்கையின் முடிவல்ல.
  திருமணத்துடன் வாழ்க்கை முடிவதில்லை ,அதுதான் ஆரம்பம் .
  செக்ஸ் தான் தேவை என்றால்அதற்கு வழிகள் உள்ளன .
  அதைத் தொடர்ந்தால், வாழ்க்கை சீர் குலையும்..
  முன்னேறும் வழியைப் பாருங்கள் .
  இந்தச் சீரழிவுக்கு திரைப் படங்கள் பெருதும் உதவி இருக்கின்றன (?).
  ஒழுக்கக் குறைவை இலக்கிய அந்தஸ்த்துக்கு உயற்றிய பெருமை பல தமிழ்த் திரைப்படக்களுக்கு உண்டு .
  திரைப் படம் எடுப்பவர்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் , மனைவி மற்றும் தங்கள் குழந்தைகளை நினைக்க வேண்டும் .
  அமர காவியம் என்று சொல்லப்பட்டதமிழ்த் திரைப்படத்தை எடுத்தவர் ,அதற்காக வருந்தும்படி அவர் குடும்பத்தில் ஒரு நிகழ்வு .
  எத்தனை குடும்பங்கள் சீரழிந்தனவோ ?

  As it happens, while I was travelling in a Bus,I overheard ( the entire bus heard!),two girls not over 13/ 14 discussing to whom they shall propose, among their friends,Compere Siva Kaarthkeyan Actors Surya and Ajith!

  I was shocked.

 • abinaya

  sakotharana ungal nilai than ennaikum vedu pada mudiyamal thavikiren….. nengalathu kadha noi l irunthu vedu pattu nalla murail valkaiyai amaithu kolungal…….

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: