என்னை சஸ்பெண்ட் செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை! வழக்குத் தொடருவேன்! எஸ்.ஏ. சந்திரசேகர் அறிக்கை
கடந்த 13-04-2012 வெள்ளிக்கிழமை தினசரி பத்திரிகைகளில் ஞாயிற்றுக்கிழமை தயாரிப்பாளர்களு க்கான சிறப்பு கூட்டம் நடத்தப் போவ தாக பார்த்தேன். அதை பார்த்ததும் இப் படி திடீரென்று கூட்டப்படும் கூட்டம் எல்லோருக்கும் குழப்பத்தை ஏற்படுத் தும். எனவே அதை தவிர்த்து விடும்படி நானும் செயலாளர் தேனப்பனும், பொருளாளர் கலைப்புலி தாணுவும் சேர் ந்து ஒரு விளம்பரம் மூலமாகவும், அறிக்கை மூலமாகவும் செயலாளர் முரளிதரனுக்கு தெரியப்படுத்தினோம்.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத் தாமல் 15-04-2012 ஞாயிற் றுக் கிழமை அன்று சிறப்புக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த சிறப்பு கூட்டத்தில் என்னை ஆறு மா தம் சஸ்பெண்டு செய்வதா க அறிவித்துள்ளார்கள். இ தை நான் செய்தி மூலம் படி த்து தெரிந்து கொண்டேன். தமிழ் திரைப்பட தயாரிப் பாளர் சங்கத்தில் முறைப் படி ஓட்டுப் போட்டு தலைவ ராக தேர்வு செய்யப்பட்டவ ன் நான். தலைவரின் அனு மதியில்லாமல் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடத்தியது தவறுதலாகும். இது ஜன நாயகப்படி ஓட்டுப் போட்ட தயாரிப்பாளர்களை அவமதிக்கும் செயலாகும்.
இந்த சிறப்புக் கூட்டத்தில் என்னை ஆறு மாதம் சஸ்பெண்டு செய் திருக்கிறார்கள். ஓட்டுப் போட்டு தேர்வா ன ஒருவரை சஸ்பெண்டு செய்ய யாருக் கும் உரிமையும் கிடையாது. அப்படியே ஒருவர்மீது நடவடிக்கை எடுக்க வேண் டுமென்றால், செயற்குழு கூடி முதலில் அவருக்கு ஷோக்காஸ் நோட்டீஸ் அனு ப்பி விளக்கம் கேட்க வேண்டும். பதிலி ல் திருப்திகரம் இல்லாவிட்டால் பொது க்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்க லாம் என்று பைலா சொல் கிறது. நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். நான் திரும்பி வந்ததும் சங்க விதிமு றைகளைமீறி பொதுக் கூட்டம் நடத்தி யவர்கள் மீதும், விதிமுறை களை மீறி என்னை சஸ்பெண்டு செய்தவர்கள் மீதும் சட்டப்படி வழக்குத் தொ டருவேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் எஸ்.ஏ. சந்திரசேகரன் அவர்கள் கூறியுள்ளார்.
செய்தி பாலா
விதை2விருட்சம்