சுமத்ரா தீவில் நேற்று மாலை மீண்டும் நில நடு க்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நில நடுக் கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. நில நடுக்கத்தால் அலுவலகங்கள், வீடுகளில் இருந்தவர்கள் பீதியில் ஓட்டம் பிடித்து தெருக்களி ல் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கத்தை உணர்ந்து அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிரு ந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். கடந்த 11 ம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2.15 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. மேலும் இந்த பயங்கர நில நடுக் கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த வாரம் இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்பட்டு, அதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது அதனால் ஏற்பட்ட பாதிப்புக் களிலிருந்து இன்னும் மீளாத நிலையில் நேற்று மாலை மீண்டும் ஏற்பட நிலநடுக்கத்தால் பீதியில் உறைந்து போயுள்ளனார். .