Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக அரசின் புதிய மின் கட்ட‍ண உயர்வுப் பட்டியல் (முழு விவரம்)

(இத படிக்கும்போதே உங்களுக்கு ஷாக் அடிச்சா, நாங்க பொறுப்பில்லீங்க!)

பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் மின்சார பில் அதிகரிக்கப் பட்டுள்ளது. மின் கட்டணம் உயர் த்தப்பட்டது பற்றி சட்டமன்றத் தில் கேள்வி எழுந்த‌போது முதலமைச்சர்” TNERC என்கிற அமைப்பு தான் மின் கட்டண த்தை உயர்த்தி உள்ளது. தமிழக அரசு அல்ல. எனவே நாங்கள் ஏதும் செய்ய முடியாதுய என்று கூறினார். இதை நடந்த‌ அடுத்த இரண்டு நாட்களில்  மின் கட்டணம் குறைக்கப்படு வதாக முதல மைச்ச‍ர்  என அறிவித்தி ருக்கிறார்..  கட்ட‍ணத்தை உயர்த்து வது மட்டும் TNERC ஆம். அதை குறைப்பது தமிழக முதல்வராம் !

சரி புது Tariff என்ன என்று பார்ப்போம்

இது தமிழக அரசு முதலில் அறிவித்த மின் கட்டண Tariff:

பிரிவு :1 : up to 100 – 0 to 100 Rs.1 .10
பிரிவு :2 : up to 200 – 0 to 200 Rs.1.8
பிரிவு :3 : up to 500 – 0 to 200 Rs.Rs.3 and 201 to 500 Rs.3 .50
பிரிவு :4 : Above 500 – 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75

இது பின்னர் குறைத்து அறிவிக்கப்பட்ட Tariff

பிரிவு :1 : up to 100 – 0 to 100 Rs.1
பிரிவு :2 : up to 200 – 0 to 200 Rs.1.5
பிரிவு :3 : up to 500 – 0 to 200 Rs.Rs.2 and 201 to 500 Rs.3
பிரிவு :4 : Above 500 – 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75

இந்த புது Tariff-ன் படி

உங்கள் வீட்டில் 100  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 100 என வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.65 )

200யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 300 வரும்.(இதற்கு முன் கட்டிய   பில் ரூ.220 )

300  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 700 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.440 )

400  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 1000 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.660 )

500  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 1300 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.880 )
***

இனி தான் இருக்கு நிஜ ஷாக். நாம் EB  பில் கட்டுவது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை. என வே நம்மில் பலர் வீட்டுக்கு ஒவ் வொரு இரு மாதமும் யூனிட்டு கள் ஐந்நூறுக்கு மேல் தான் வரும். இந்த Category-க்கு விலை உயர்வில் எவ்வித சலு கையும் செய்யப் பட வில்லை ! மின் கட்டணம் குறைக்கப்பட வில்லை.

இவர்களின் பில்லை பாருங்கள் :

600 யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 2375 வரும்.  (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1100 )

700  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 2950 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1500 )

800  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 3525 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1900 )

900  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 4100 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.2300 )
***
எங்கள் வீட்டை எடுத்து கொள் ளுங்கள் நாங்கள் சராசரியாக  அறுநூறு  யூனிட் செலவு செய் கிறோம். இதுவரை ரூபாய் 1100 -ஆக இருந்தது எங்கள் பில். இப்போது அது 2375  ஆக இருக்கும் ! 100 % க்கும் மேல் !

இத்தனைக்கும் மூன்றே பேர் இருக்கிறோம் என்பதோடு, ஒரு ஏ. சி அதுவும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஓடுவதில்லை. சற்றே பெரிய குடும்பம் எனில் எவ்வளவு யூனிட் ஓடும் என எண்ணி பாருங்கள் !

இதை விட கொடுமை 490 யூனிட் உபயோகிப்பவருக்கும், 501 யூனிட் உபயோகிப்பவருக்கும் உள்ள வித்யாசம் !

490 யூனிட் உபயோகிப்பவர் பில் : 1270

அதை விட பத்து யூனிட் அதிகமாக, 501 யூனிட் உபயோகிப்பவர் பில்: 1804 !! இன்னும் சொல்ல வேண்டுமானால், 500 லிருந்து 501 ஆனாலே, ஒரு யூனிட் உயர்வுக்கு குறைந்தது ஐநூறு ரூபாய்க்கு மேல் அதிகம் கட்ட வேண்டும் !!

மக்களை மிக மோசமாய் discriminate செய்வதற்காக  ஏன் இன் னும் உயர் நீதி மன்றத்தில் யாரும் பொது நல வழக்கு தொடராமல் உள்ளனரோ தெரியவில் லை.

எனக்கு தெரிந்த வரை உங்களில் பலரின் யூனிட்டுகள் 500-க்கு மேல் தான் இருக்கும். உங்கள் வீட்டில் ரெண்டு பெட்ரூம், ஒரு பிரிட்ஜ், ஒரு டிவி, ஒரு ஏ. சி இருந்தால் உங்கள் வீட்டில் யூனி ட்டுகள் 500-க்கு மேல் எளிதில் வந்து விடும் ! நான் சொன்ன வீட்டு உபயோக பொருட்கள் சாதாரண மிடில் கிளாஸ் வீட்டில் இருக்க கூடிய விஷயங்களே !

இந்நிலையில் எப்படி தான் முதல்வர் வெறும் 30 % தான் மின் கட்டண உயர்வு என்கிறாரோ? பில் கட்டுவோர் அதே EB கார்டை தான், எடுத்து செல்ல போகி ன்றனர். அப்போது சென்ற மாதங்களுக் கும் இம்முறைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட மாட்டார் களா?

எனக்கு தெரிந்த வரை இதுவரை யாரும் தங்களுக்கு என்ன அளவு பில் வரும் என தீவிரமாய் கணக்கு பார்க்க வில்லை ! அப்படி செய் தால் தான் அவர்களுக்கு ஷாக் அடிக்கும் !! உங்கள் வீட்டுக்கு எவ்வ ளவு யூனிட் வழக்கமாய் வரும் என்பதை பார்த்து உங்களுக்கு நீங் கள் கணக்கிட்டு பாருங்கள் !

இன்னொரு முக்கிய விஷயம். ஏப்ரல் முதல் தான் இந்த மின் உயர் வு அமலில் வந்துள்ளது. உங்களுக்கு மார்ச், ஏப்ரல் இரு மாதங்களு க்கான பில்லை பார்த்தால் முழு பாதிப்பும் தெரி யாது. காரணம் மார்ச் மாதம் பழைய ரேட்டும், ஏப்ரல் புது ரேட்டிலும் இருக்கும். அடு த்த சைக் கிள் வரும்போது தான் அதன் முழு effect தெரியும் !

எனக்கு தெரிந்து நண்பர்கள் பலரின் வீட்டில் (குறைந்தது பத்துக்கு இருவர்!) ஈ. பி மீட்டர் வேலை செய்வதில்லை. அவர்கள் மினிமம் பில் தான் எப்போதும் கட்டுகிறார்கள். இவர்கள் இதனால் ஏ. சி போன்றவ ற்றை நிறுத்தாமல் ஓட்டுகிறார்கள். இரு மாதத்துக்கு ஒரு முறை கரண்ட் பில் எழுத வருபவர் இந்த மீட்டர்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை.

போலவே ஆட்சி எதுவாயினும் ஒவ் வொரு அரசியல் மீட்டிங், கோயில் விழா இவற்றுக்கு தெரு முழுதும் வண் ண விளக்குகள் போட்டு அமர்க்கள படுத்துகின்றனர். அனைத்தும் திருட்டு கரண்ட் !

இப்படி ஓடாத ஈ. பி மீட்டரை சரி செய்து, மின் திருட்டையும் சரி செய்தாலே அரசுக்கு ஏராளமாய் வருமானம் வரும். ஆனால் அரசு இவ்விஷயத்தில் திருடர்களை விட்டு விட் டு, ஒழுங்காய் பில் கட்டுவோரை தான் தண்டி க்கும் !

மொத்தத்தில் : உங்கள் வீட்டு பில் 500 யூனி ட்டுக்கு மேல் போகாத படி பார்த்து கொள்ளு ங்கள். எப்படி என கேட்காதீர்கள். சிரமம் தான் ! இல்லை எனில் உங்கள் பட்ஜெட்டில் சில ஆயிரங்களை எக்ஸ்ட் ராவாக மின் கட்ட ணத்துக்கு தயார் செய்து வைத்து கொள்ளுங்கள் !

thanks to veeduthirumbala

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: