Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபல பின்ன‍ணி பாடகி சைந்தவியை கரம்பிடிக்கிறார் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த‍ சகோதரி மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளருமான‌ ஜீ.வி. பிரகாஷ்குமார், தனது காதலியும் பிரபல பின்னணி பாடகியுமான சைந்தவியை  அடுத்த (2013ஆம்) ஆண்டு ஜனவரி மாதம் திரு மணம் செய்ய‍விருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என்று மொழி தாண்டி இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் இசையமைத்து வெளியாடன ஆடுகளம், தெய்வத்திருமகள், முப் பொழுதும் உன் கற்பனைகள் போன்ற சூப்ப‍ர் ஹிட் படங்களை கொடுத்த வெற்றியாளர் நீண்ட நாட்களாக தான் காதலித்து வந்த பிரபல பின்ன‍சி பாடகி சைந்தவியை கைப்பிடிக்கும் எண்ணத் தில் இருக்கிறார்.  இவர்களது காதலுக் கு இருவரது வீட்டிலும் சம்மதம் தெரி வித்து விட்டனர். இதனால் விரைவில் திருமணம் நாள் பார்த்துக் கொண்டிருக் கின் றனர்.

இதுகுறித்து ஜீ.வி.யிடம் கேட்டபோது, இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படங்கள் முடிக்க வேண்டியுள்ளது. அதனால் அடு த்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்ய நாள் பார்த்து கொண்டிருக்கி ன்றனர். திருமண தேதி முடிவானதும் விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறி யுள்ளார்.

– vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: