Friday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணையத்தில் இனியவைகள் – ஆய்வில் தகவல்

ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பில் ஈடுபடும் நார்டன் நிறுவனம், அண் மையில் இந்தியாவில் இணையப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி, அதில் கண்டறிந் த முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவை:
 
1. இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொ ன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இணைப்பி ல் இருப்பவர்கள், அவர்கள் ழித்திருக்கும் நேரத் தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர்.
 
இது வாரத்திற்கு 58 மணி நேரமாக உள்ளது. ஆய்வில் கலந்து கொ ண்டவர்களில் பாதிப்பேருக்கு, இணைய தொடர்பு அற்ற நிலையில் முதல் மூன்று மணி நேரம் ஒருவகை மனப்பாதிப்பில் இருந்தவர்க ளாகவே உள்ளனர்.
 
2. இன்னொரு ஆய்வில், இணையத் தைப் பயன்படுத்துபவர்கள், ஒரு வார த்தில், இணைய உலாவில் 12.9 மணி நேரமும், சமுதாயத் தளங் களில் 9.7 மணி நேரமும், மின்னஞ்சல் பயன் படுத்துவதில் 6.1 மணி நேரமும் செல வழிக்கின்றனர். இந்த ஆய்வு, இணை யம் பயன்படுத் தும் 500 பேர்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது. இவர் கள் வயது 18 லிருந்து 64 வரை உள்ள வர்கள்.
 
3. ஆய்வில் கலந்து கொண்டவர்களி ல் 80% பேர், தாங்கள் இணைய இணைப்பில் இல்லாமல் 24 மணி நேரத்திற்கு மேல் இருக்க முடியா து என உறுதியாகத் தெரிவித்தனர்.
 
4. இணையத் தொடர்பு இல்லாமல் போனால், தங்கள் அத்தியாவசிய வேலை அதிகம் பாதிக்கப்படும் எனவும் கூறினர். அடுத்ததாக, இவர் கள் முக்கியத்துவம் அளித்தது சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துவதுதான். மூன்றாவதாகத் தான், இணையவழி வர்த்தக ம் மேற்கொள்வது மற்றும் பணம் செலுத்துவதனைக் கூறினர்.
 
5. ஒவ்வொருவரும் வீட்டில், குறைந்தது இரண்டு சாதனங்க ளையா வது இன்டர்நெட்டில் இணைத்து பயன்படுத்துகின்ற னர்.
 
6. இன்னொரு வியக்கத்தக்க தக வலும் வெளியானது. தங்களு டைய தனிப்பட்ட தேவைக்கென வைத்துள்ள கம்ப்யூட்டரில், அடு த்தவர்களை அனுமதிப்பதை வெ றுத்தனர். ரூ.1,00,000/- இழப்பு கூட இதைக் காட்டிலும் பெரியதாகத் தெரியவில்லை.
 
7. இவர்களில் 60% பேர் மட்டுமே தங்கள் கம்ப்யூட்டர்களில் அடிப் படைப் பாதுகாப்பினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பயன்படுத் தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் புதிய மால்வேர் புரோகிரா ம்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை என நார்டன் ஆய்வா ளர்கள் தெரிவிக் கின்றனர்.
 
8. இணைய இணைப்பு பெறுவதில் 92% அளவில் கம்ப்யூட்டர்களும், 72% அளவில் மொபைல் போன்களும், 39% அளவில் டிவிக்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply