Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காமெடியுடன் உன்னத காதலைச்சொல்லும் மனம் கொத்திப் பறவை

மனம் கொத்தி பறவை என்ற பெயரில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒரு காமெடி திருவிழாவாக இருக்கும் என்று அப்படத்தின் தயாரி ப்பாளரும், டைரக்டருமான எழில் கூறியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் எழில், முதன் முதலாக தயாரித்து, இயக்கியிருக் கும் படம், மனம் கொத்தி பறவை. இந்தப் படம் குறித்து அவர் அளித் துள்ள பேட்டியில், இது, ஒரு காதல் கதை. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை காமெடித் திருவிழா என்று சொல்லும் அளவுக்கு படம் கலகலப்பாக இருக்கும்.

சிவகார்த்திக்கேயன் – ஆத்மியா ஜோடியுடன் இளவரசு, சிங்கம் புலி, சூரி, வெ.ஆ.மூர்த்தி, சாம்ஸ், ரவி மரியா, ஸ்ரீநாத், வனிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். அனைத்து பாடல்களும் மீண்டும் கேட்க தூண்டுகிற மாதிரி இசையமைத்து இருக்கிறார், டி.இமான். என்ன சொல்ல ஏது சொல்ல… எனத் தொடங்கி தொடரும் பாடல் மூணா ரில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியிலும், ஊரான ஊரும் இல்ல… என்ற பாடல் கடும் குளிரில் பனி படர்ந்த மலைப்பகுதியிலும் படமாக்கப் பட்டது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. பின்னணி இசை சேர்ப்பு பணியும் நிறைவடைந்து விட்டது, என்று கூறியுள்ளார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply