Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தங்கத்தில் முதலீடு செய்வது . . . ?

தங்கத்தில் முதலீடு செய்வது நல்ல விஷயம்தான். அழகுக்கு அழகு, லாபத்திற்கு லாபம் தருபவை தங்க முதலீடு. ஆனால், நம் மொத்த முதலீட்டில் எத்தனை சத விகிதம் தங்கத்தில் செய்யலாம் என்பதற்கு ஓர் அளவு இருக்கிறது. அது என்ன அளவு? என வெல்த் கிரியேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் சர்வீஸ ஸ் நிறுவனத்தின் சி. இ.ஓ. திருமுருகனிடம் கேட்டோ ம்.
 
நம் பணத்தை முதலீடு செய்யும்போது அதனை பல விதங்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட் என பல இடங்களில் பிரித்து முதலீடு செய்வதற் குப் பெயர்தான் அசெட் அலகேஷன்.
உதாரணமாக, நீங்கள் நூறு ரூபாய் முதலீடு செய்யப் போகிறீர்கள் எனில், ஐம்பது ரூபாய் பங்குச் சந்தையி லும், பத்து ரூபாய் மியூச்சுவல் ஃபண்டி லும், பத்து ரூபாய் ரியல் எஸ்டேட்டிலு மாகப் பிரித்து முதலீடு செய்ய வேண் டும்.

ஏன் இப்படி செய்ய வேண்டும் எனில், நமது முதலீட்டில் ஏதாவது ஒன்று தாறுமாறாக விலை வீழ்ச்சியடைந்தால் மற்ற முதலீடுகள் அந்த பாதிப்பை சரிக் கட்டும்.

எடுத்துக்காட்டாக, 2008-ம் ஆண்டிலிரு ந்து பங்குச் சந்தை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வருமானம் தரவில்லை. ஆனால், தங்கமும், ரியல் எஸ்டேட்டும் நல்ல வருமானம் தந்தது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிக்கட்ட இந்த லாபம் நிச்சயம் உதவியாக இருந்திருக்கும்.

ஆனால், கடந்த ஒரு வருட த்தில் தங்கம் அதன் உச்சபட்ச விலையை அடைந்துவிட்டது. இனிவரும் காலத்தில் தங்கம் அந்தளவுக்கு விலை உயர வாய்ப்புகள் குறைவு. எனவே, ஒருவர் அசெட் அலகேஷன் விதி முறைகளைப் பின்பற்றா மல் தங்கத்தில் மட்டுமே அதிக அளவில் முதலீடு செய்வது சரியல்ல. அதிகபட்சமாக உங் களது முதலீட்டில் 15-20% வரை முதலீடு செய்யலாம். அதற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வதே உங்கள் பணத்திற்குப் பாது காப்பு” என்றார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: