Tuesday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல !??

திருமணம் என்பது சரியான துணை யைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியா ன துணையாக இருப்பது’ என்று ஒரு பழமொழி உண்டு. திருமணத்தின் உண்மையான அர்த்தமே தம்பதியர் இருவரும் சரியாக வாழ்ந்து காட்டுவ தில்தான் இருக்கிறது! நீங்களும் ஆத்மார்த்தமான தம்பதியராக இருக் க நிபுணர்கள் கூறும் இல்லற மந்திரத்தை பின்பற்றுங்களேன்.

பாசப்பிணைப்பு

நிச்சயதார்த்தம் முடிந்த உடன் வருங்கால துணையோடு பீச், சினிமா என்று போவதில் தவறில்லை. அதேபோல அவர் கள் வீட்டுக்கும் ஒரு முறை சென்று வாருங்கள். அங்கே போக கூச்சப்பட்டால் போனிலாவது மாமனார், மாமியார், நாத்தனார் என மற்ற உற வுகளோடு பேசிப் பழகுங்கள். அது திருமணம் முடிந்து நீங்கள் அந்த வீட்டில் கால் எடுத்து வை க்கும்போது, அவர்களுக்கும் உங்களுக்கும் இடை யேயான அந்நியத் தைக் குறைத்திருக்கும். அதேபோல் துணையின் வீட்டு உறவுகளோ டு சந்தோஷமாக இருப்பதுபோல மனதில் கற்பனை செய்யுங்கள். இது புதிய உறவுகளுடன் சுமுகமாவதற்கான மனப் பயிற்சியாக அமை யும்.

அதிக எதிர்பார்ப்பு ஆகாது

துணையைப் பற்றிய எதிர்பார்ப்பை ஆரம்பத்தி லேயே அதிகம் வளர்த்துக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை மனதை காலி பையாக வைத்துக் கொண்டு கிடைப்பதை அமைதியாகச் சேகரியு ங்கள். பிடிக்காத தை பிறகு தவிர்த்து விடலாம். என்னதான் இருந்தாலும் உங்கள் பக்க உறவுக ளோடு நீங்கள் இருப்பது போன்ற அந்நியோன்யத்துடன் துணையால் இருக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அது போன்ற விஷ யங்களுக்கு மனதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.

உபதேசங்கள் ஜாக்கிரதை

நிச்சயதார்த்தம் முடிந்த உடன் வரும் அறிவுரை களை கேட்டு அச்ச மடையாதீர்கள். எது சரி, எது தவறு என அமைதியாக யோசித்து சரியானதை ‘டிக்’ அடியுங்கள். அதேபோல் பிறந்த வீட்டு உபதே சங் களை செவிப்பறையோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அந்த விதை , பின் பல பிரச்னைகளுக்கு வேராகிவிடும்.

மேரேஜ் கவுன்சிலிங்

தாத்தா, பாட்டி காலத்தில் திருமணங்கள் முடித்து வைக்கப்பட்ட போ து, இருவருக்குமே அவரவர்க்கென பெரிய அளவி ல் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் வளர்ந்திருக்க வில்லை. அவர்களாகவே வாழ்க்கையை புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பழகிக் கொண்டார்கள். ஆனால், இன்றைய சமூக, பொரு ளாதர மாற்றங்களால் ஆண், பெண் இருவருக்கு மே சுயசிந்தனை, சுதந்திரம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் என்றெல்லாம் அவரவர்களுக்கென கேரக்டரை சமரச ங்களின்றி அமைத்துக் கொள்கிறார்கள்.

வெவ்வேறு துருவங்களாக இருக்கும் இருவர், மணவாழ்க்கையில் இணையும்போது பிரச்னைகள் ஏற்படுவது இய ல்பு. எனவே, திருமணத்திற்கு முன்னர் அவர்களு க்கு வாழ்வியல் பற்றி ஆலோசனைகள் அவசிய மாகிறது. திருமணம் செய்துகொள்ளும்முன் மன தள விலான பயிற்சிகள் அவசியம். அது சுய பயிற் சியாகவும் இருக்கலாம் … அனுபவம் வாய்ந்த பெரியோரின் வழிகாட்டுதல்களாகவும் இருக்கலாம். அல்லது குடு ம்ப நல ஆலோசகர்களின் அறிவுரைகளாகவும் இருக்கலாம்.

நேர்மறை தகவல்கள்

இந்தக் கால கட்டத்தில் திருமண முறிவு, கல்யா ணத்தன்று தகராறு போன்ற நெகட்டிவ் செய்திக ளைக் கேட்கவோ, படிக்கவோ சந்தர்ப்பம் வருவது போல் தெரிந்தால், கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். நல்லவை மட்டுமே மனதுக் குள் போகட்டும்.

பொறுமை அவசியம்

துணையின் ‘ஆத்மார்த்த’ உறவாகிவிட வேண்டும் என்ற ஆசை சரி தான். ஆனால், திருமணம் நடந்த ஒரு நாளி லோ, ஒரு மாதத்திலோ அது நிகழ்ந்துவிடாது. அதற்கு அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்பு த்தன்மை, புரிதல் என பல விஷயங்கள் தேவை ப்படுகின்றன. அவை நமக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும், இல்லா தவற்றை வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.

குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் இரண்டு விஷயங்கள்… அன்பு, நம்பிக்கை. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந் தவை. ஒன்றின் நூலிழை அறுந்தாலும் இன்னொன்றில் நூலிழை அது வாகவே அறுந்துவிடும் என்பதால் எப்போதும் இவை இரண்டிலும் நேர்மையாக இருப்பது ஆரோக்கியமானது.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply