Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பி.டி.எப் (PDF) பைல் வெட்ட, ஒட்ட

பல பி.டி.எப். பைல்களை ஒரே பைலாக இணைத்துப் பயன்படுத்தி னால் நன்றாகப் படிப்பதற்கு பயனு ள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனை த்து பைல்களின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும்.
 
இவை அனைத்தையும் ஒவ்வொன் றாக இந்த தளத்திற்கு அப்லோட் செய்திட வேண்டும். இவற்றை எந்த வரிசையில் இணைக்க வேண் டும் என்பதனை, அந்த தளத்தில் வைத்தே பிரித்து அடுக்கலாம். அடு த்து merge பட்டனை அழுத்தியவுடனேயே, அவை அனைத்தும் ஒருங் கிணைக்கப்பட்டு ஒரே பைலாக மாற்றப்படும்.
 
இந்த பைலை தரவிறக்கம் செய்திட ஒரு லிங்க் உங்களுக்குத் தரப் படும். நீங்கள் விரும்பும் டைரக்டரியில் அதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். நீங்கள் அனுப்பிய பைல்கள் அந்த தளத்தில் இருக்கா து. எனவே உங்களிடம் தனியாகவும், இணைக்கப்பட்டும் பைல்க ளை உங்கள் கம்ப்யூட்டரில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
அடுத்த வசதி, பி.டி.எப். பைல் ஒன்றைப் பிரிப்பது. முதலில் பிரிக்க வேண்டிய பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுத்து அப்லோட் செய்திடுங் கள். அப்லோட் செய்திடும் முன், எந்த எந்த பக்கங்களைப் பிரிக்க வேண்டும் எனக் குறித்து கொள்ளுங்கள்.
 
அப்லோட் செய்து, பிரிப்பதற்கான (split) பட்டனை அழுத்தியவுடன், கிடைக்கும் டய லாக் பாக்ஸில், பிரிக்கப்படவேண்டிய பக்கங்களின் விபரங்கள் கேட்கப்படும். இங்கு கேட்கப்படும் தகவல்களை படிப்படியாகத் தந்த பின்னர், பிரிப்பதற்கான பட்டனை அழுத்தவும்.
 
உங்களுக்கு ஒரு பி.டி.எப்.பைல் கிடைத்துள்ளது. அதில் சில திருத்த ங்களை மேற்கொள்ள, அல்லது குறிப்புகளை இணைக்க விரும்புகி றீர்கள். ஆனால் அது பாஸ்வேர்ட் கேட்கிறது. என்ன செய்யலாம்? இந்த தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். Unlock பிரிவிற்கான பட்டனை அழுத்துங்கள். இப்போது உங்கள் பி.டி.எப். பைலில் இந்த தளம் அதன் பாஸ்வேர்டை நீக்க முயற்சிக் கும்.
 
அப்படியும் முடியாத பட்சத்தில், விபரங்களைத் தந்து இயலவில்லை என்ற செய்தியைத் தரும். ஒரு பி.டி.எப். பைலை எந்த தரப்படி என்கி ரிப்ட் செய்ய வேண்டுமோ அதன்படி செய்திருந்தால், பாஸ்வேர்ட் நீக்கப்படும். வேறு வழிகளில் பாதுகாக்கப்பட்டிருந்தால், இயலாது என இந்த தளம் அறிவித்து ள்ளது.
 
இதே போல பாஸ்வேர்ட் இல்லாத உங்கள் பைலுக்கு பாஸ்வேர்ட் அளிக்கும் வசதியையும் இந்த தளம் தருகிறது.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: