Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மொட்டை மாடியில் தரையிறங்கிய ஹெலிகப்டர் – வீடியோ

இந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹெலிகப்டர் ஒன்று மிக அவசரமாக வீட்டின் மொ ட்டை மாடியில் தரை இறக்கப்பட்டது. பெங்க ளூரைத் தலைமையகமா க கொண்டு செயல்படும் இந்துஸ் தான் ஏரோனா டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெ ளித் தொழில் துறை நிறுவனமாகும்.

இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தை உரு வாக்கியது. இதற்கு நாசிக், லக்னோ, ஹைதராபாத் ஆகிய இடங்க ளிலும் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் ஹெலி கப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற ன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒரு பயிற்சி ஹெலிகப்டரை ஒரு பைலட் மற்றும் துணை பைலட் ஆகியோர் செலுத்தினர்.

இதில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசர மாக தரையிறக்க வேண் டிய சூழ்நிலை உருவா னது. இதனை தொடர்ந் து பெங்களூரில் ஒரு வீட்டின் மொட்டை மாடி யின் மேல் தரை இறக்கி னர். உடனடியாக பைலட் மற்றும் துணை பைலட் பத்திரமாக தரையிறங் கினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட் டது மட்டுமின்றி எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: