Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினிமா இயக்குநர்கள் சங்கத்துக்கு புதிய இணையதளம்- வெப் டிவி!

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கான இணையதளம் புது ப்பொலிவுடன் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. மேலும் வெப் டி. வி. ஒன்றும் தொடங்கப்பட்டுள்ள து. இதுகுறித்த அறிமுக நிகழ்ச்சி யில் திரைப்பட இயக்குநர்கள் சங்கச் செயலாளர் அமீர், பொரு ளாளர் எஸ்.பி.ஜனநாதன் ஆகி யோர் சென்னையில் செய்தியாள ர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், “இயக்குநர் சங்கத் துக்கு என ஏற்கெனவே இணையதளம் இருந்தபோதும் அது முறை யாக செயல் படவில்லை.

அதனால் நவீன தொழில்நுட்பத்துடன் ஏராளமான தகவல்களை உள் ளடக்கி புதிய வடிவில் இணைய தள த்தைத் தொடங்கியுள்ளோம். www.tantis.in என்ற இந்த இணைய தளமும் திரைப்படத்துறை குறித்த செய்திகள் அடங்கிய 24 மணி நேர வெப் டி.வி.யும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும். இந்த இணைய தளத்தில் திரைப்பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோரு க்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் இருக்கும். இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரைப் பற்றிய முழுத் தகவல்க ளும் இதில் இடம்பெற்றிருக்கும்.

மேலும் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்கு ஒரு படத்தை எப்படி அனுப்புவது, ஓர் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே யான ஒப்பந்தம் அமைக்கப்பட வேண்டிய விதம், உறுப்பினர்களுக்கு உள்ள அடி ப்படை உரிமை, மருத்துவக் காப் பீட்டுத் திட்டம், உதவித் தொகை, இயக் குநர் சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்களும் இதில் இடம் பெற்றிருக்கும். 24 மணி நேர வெப் டி.வி .யில் டிரெய்லர்கள் இலவசமாகவும், தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதத் தில் விளம்பரங்கள் மிகக் குறைந்த கட்டணத்திலும் ஒளிபரப்பப்படும் என்றனர். ட்ரைலராக வழக்கு எண் 18/9 வரும் 20ம் தேதி ஒளிபரப்பாகும்,” என்றனர்.

இந்த இணையதளத்தை இயக்குநர்கள் அமீர், ஜனநாதன், எஸ் எஸ் ஸ்டேன்லி, தம்பி துரை, பாலசேகரன், ஜெகன்னாத், வித்யாசாகர், கமலக் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தொடங்கிவைத்தார். மூத்த சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான யோகி தேவராஜ் உடனிருந்தார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply