Thursday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தூங்கும்போது குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையினால் . . .

குறட்டை சாதாரணமானதா அல்லது ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea ) என்கிற பிரச்னையா என்பதைப் பொருத்தே, அதற்கான சிகிச்சை கள் இருக்கின்றன. அதனால், குறட் டையின் தன்மையைக் கண்டுபிடிப் பதற்கு ‘ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் பரி சோதனை முறையை முதலில், மே ற்கொண்டாக வேண்டும். குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையி னால், மூச்சு ஓட்டம் தடைபடுகிற தா? மூளைக்குச் செல்லும் ஆக்சிஜ ன் அளவு குறைகிறதா? இதயத் துடி ப்பில் பாதிப்பு ஏற்படுகிறதா? இப்படி யான கேள்விகளுக்கு எல்லாம் தெளிவான விடையைச் சொல்வது தான் ‘ஸ்லீப் ஸ்டடி’!   

இந்தப் பரிசோதனை மூலம் ‘ஸ்லீப் ஆப்னியா பாதிப்புக்கு உள்ளான வர் ஆரம்பக்கட்ட (Mild Sleep Apnea) நிலையில் இருக்கிறாரா அல் லது ஆபத்தான கட்டத்தில் இருக் கிறாரா என்பதைக்கண்டுபிடித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்க முடியும். உடல் பருமனா க இருந்தால், உடற்பயிற்சிகள் மூலம் உடலை இளைக்க வைப் பது; தைராய்டு பிரச்னை உள்ளவ ர்களுக்கு அதற்கான மருத்துவச் சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செய்வது; மது மற்றும் புகைப் பிடி ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவராக இருந்தால், அவற்றைக் குறைத்துக்கொள்ளச் செய் வது போன்றவை முதல் கட்ட பொது சிகிச்சை முறைகள். ஸ்லீப் ஆப்னியா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு அறு வை சிகிச்சை முறை ஒன்று உள்ளது.

அறுவை சிகிச்சை என்றதும் பயப்பட வேண்டாம். தொண்டைக் குழி ப் பகுதியில், மூச்சுக் குழாய் பாதையின் அளவைப் பெரி தாக்குவதற்கான ‘மைனர் ஆபரேஷன்’தான் இது. லேசர் முறையில் செய்யக்கூடிய இந்த அறுவை சிகிச்சையை வெளிநோயாளியாக வந்தே செய்து கொள்ள முடியும். இ து தவிர சிறப்புப் பல் மருத்து வரின் (Prostho dentist) ஆலோசனையோடு செய்துகொள்ளக் கூடிய ‘ஓரல் அப்ளை யன்ஸ்’ (Oral Appliance)சிகிச்சை முறையும் உள்ளது. இதன்படி ஸ்லீப் ஆப் னியா பாதிப்பு உள்ளவரின் தாடை அளவைக் கணக்கெடுத்து வாயி னுள் பொருத்திக்கொள்ளக் கூடிய அளவில் க்ளிப் ஒன்றைத் தயார் செய்வார்கள்.

இரவில் தூங்கும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொள்ளக்கூடிய இந்த க்ளிப்பை வாயினுள் பொ ருத்திக்கொண்டால், கீழ்த்தா டையானது முக அமைப்பில் இருந்து சிறிது முன்நோக்கி நக ர்ந்த நிலையில் இருக்கும். இத னால், தொண்டைப்பகுதி- குரல் வளைப் பாதையின் அளவு சிறி து விரியும். அதனால், குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல் லாமல் போய்விடும். தேவைக் கு ஏற்றாற்போல் இந்த க்ளிப்பின் ஏற்ற இறக்க அளவுகளைச்சரிசெய் து அணிந்து கொள்ளக்கூடிய இந்தச் சிகிச்சை முறை மிகவும் எளி தானது.

ஸ்லீப் ஆப்னியா பாதிப்பு தீவிரமான நிலையில் இருப்பவர்கள் தூங் கும் சமயங்களில், ‘சிபாப்’ (CPAP – Continuous Positive Airway Pressure)  எனப்படும் முகமூடியை (விணீsளீ) அணிந்துகொள்வது தான் சிறந்த வழி. முகத்தில் பொருத்திக்கொள்ளும் இந்த முகமூடி யில் இருந்து தொடர்ச்சியாக அழுத்தமான நிலையில் காற்று வெளி வந்துகொண்டே இருக்கும்.

தண்ணீர் செல்லும் குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டால் பலமா க காற்றை ஊதும்போது அடைப்பு நீங்கிவிடுகிறது அல்லவா? இந்த இயற்பியல் தத்துவ அடிப்படையில் இயங்குவதுதான் சிபாப் முக மூடி. ஆனால், சிபாப் கருவியில் இருந்து வெளிப்படும் காற்றா னது நமது மூச்சு ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்ற அழுத்தத்துடன் வெ ளிவருவதால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயல்பாக மூச்சுவிட முடிவதோடு குறட்டைத் தொல் லைப் பாதிப்பும் விலகும். இந்த முக மூடியை அணிந்துகொண்டு தூங்கி யவர்களின் அனுபவத்தைக் கேட் டால், ‘இவ்வளவு நிம்மதியாக ஆழ் ந்த நிலையில் என்னாலும் தூங்கி எழ முடியும் என்பதை இப்போது தான் உணர்கிறேன். தூங்கி எழுந்து மறுநாள் ரொம்பவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்’ என்றெல்லாம் ஆச்ச ரியப்பட்டுப் பேசுவார்கள்.

தூக்கத்தின்போது சீரான மூச்சு ஓட்டம், மூளைக்குச் செல்லும் ஆக் சிஜன் அளவு குறையாதது போன்ற காரணங்களால், நிம்மதியானத் தூக்கம் கிடைப்பதோடு காலையில் எழும்போது நல்ல புத்துண ர்வும் ஏற்படும். தவிர, ஸ்லீப் ஆப்னியா பாதிப்பின் விளை வாக ரத்தக் கொதிப்பு மற்று ம் சர்க்கரை அளவுகள் கூடி அவஸ்தையை அனுபவித் தவர்களுக்கும் அந்த நோய்களின் தீவிரம் குறையும்.

‘சரி…. ஸ்லீப் ஆப்னியா பாதிப்பு இருப்பவர்களுக்கு மட்டும்தான் பகல் வேளையில் தூக்கம் வருமா?’,  ‘மதிய சாப் பாட்டு வேளைக்குப் பின்னரான குட்டித் தூக்கம் நல்லதுதானா?’ என நீளும் கேள்வி களுக்கானப் பதில்களை அடுத்த இதழில் சொல்கிறேன்….

– ஆராரோ ஆரிராரோ

‘வாழ்க்கை முழுவதும் சிபாப் மெஷினோடு தான் தூங்கி ஆகணுமா?’

அப்படி அல்ல… உடல் பருமனால் ஸ்லீப் ஆப் னியா பாதிப்பு வந்திருந்தால், உடல் பருமன் குறைகிற வரையிலும் அணிந்துகொள்ள வேண்டியிருக்கும். அதேபோல், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை முடிகிற வரையிலும் இந்த முகமூடியை அணிந்து கொள்ளவேண்டி இருக்கும்… அவ்வளவுதான். சுருக்கமா கச் சொல்வது என் றால், ஒவ்வொருவருக் கும் ஸ்லீப் ஆப்னியா ஏன் ஏற்பட்டது என்ற தனிப்பட்ட காரணத்தைப் பொருத்தே சிகிச்சை முறையும் பின்பற்றப்படுகிறது.

மருந்து – மாத்திரைகளால் சரிசெய்ய முடியாத சூழல்களில், கண் பார்வைக் குறைபாட்டுக்கு மூக் குக் கண்ணாடி அணிவதுதான் சிறந்த சிகிச்சை முறையாக இருக்கிறது. அந்த வகையில், மருந்து – மாத்திரைகளால் குண ப்படுத்தக்கூடிய பிரச்னையாக ஸ்லீப் ஆப்னியா இல்லை என்ப தால், சிபாப் முகமூடி அல்லது அறுவை சிகிச்சை போன்ற சிகி ச்சை முறைகள்தான் இன்றைய மருத்துவத் தீர்வுகளாக இருக்கி ன்றன.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: