Saturday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அஞ்சலிக்கும், ஓவியாக்கும் இடையே `கெமிஸ்ட்ரி’ பயங்கரமா வொர்க் அவுட் ஆகுது

அஞ்சலி, ஓவியா இருவரும் `கலகலப்பு’ படத்தில் இணைந்து நடித் ததை தொடர்ந்து, இருவரும் நல்ல‍ நெரு ங்கிய‌ தோழிகள் ஆகிவிட்டனர்  இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடும லைப்பேட்டை, ஊட்டி ஆகிய இடங்களில் நடந்தபோது இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறை யில் தங்கியிருக்கிறார்கள். இதுபற்றி `கலகலப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீ ட்டு விழாவில், ருசிகர விவாதம் நடந்த து. விழாவுக்கு, யு.டி.வி.யின் தென்னிந்தி ய நிர்வாக அதிகாரி தனஞ்செயன் தலை மை தாங்கினார். டைரக்டர் சுந்தர் சி, படத்தின் கதா நாயகர்கள் விமல், சிவா, கதாநாயகிகள் அஞ்சலி, ஓவியா, நடிகர் பஞ்சு சுப்பு, ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார், இசையமைப்பாளர் விஜய் எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விழாவில், டைரக்டர் சுந்தர் சி. பேசும்போது கூறியதாவது:- “இது, நான் இயக்குகிற 25-வது படம். இந்த படத்தில் நான் நடிக்க வில்லை. கதை எழுதும்போதே யார்-யார் நடிக்க வேண்டு ம்? என்பதை மனதில் வைத்துதான் எழு தினேன். இதற்கு முன்பு நான் இயக்கிய `உள்ளத்தை அள்ளித்தா’ பாணியில், முழுக்க முழுக்க நகைச் சுவைக்கு முக்கி யத்துவம் கொடுத்து, திரைக்கதை அமை க்கப்பட்டு இருக்கிறது. கும்பகோணத்தில், 1920-ம் வருடம் முதல் இருந்து வரும் `மசாலா கபே’ என்ற ஓட்டலை பற்றிய கதை. ஒரு காலத் தில், ஓஹோ என்று பிர பலமாக இருந்த அந்த ஓட்டல், பிற்கால த்தில் `டல்’ அடிக்கிறது. தாத்தா காலத்தி ல் புகழ்பெற்று விளங்கிய அந்த ஓட்ட லை பேரன்கள் விமல், சிவா இருவரும் மீண்டும் தூக்கி நிறுத்த முயற்சிக்கி றார்கள்.

இதில் அஞ்சலி சுகாதார ஆய்வாளரா கவும், ஓவியா கல்லூரி மாணவியாக வும் நடிக்கிறார்கள். அஞ்சலியின் மாமா வாக சந்தானம் நடிக்கிறார். இதற்கு மு ன்பு 2 கதாநாயகிகளை வைத்து நான் சில படங்களை இயக்கியிருக்கிறேன். அவர்களை வைத்து படத்தை முடிப்பத ற்குள், போதும் போதும் என்றாகி விடும். உடையலங்கா ரத்தில் இருந்து எல்லா விஷயத்திலும் இரண்ட கதா நாயகிகளும் சண்டை போட்டுக் கொள் வார்கள். அவர்களுக்கு இடையே பஞ்சா யத்து பண்ணுவதற்கே நேரம் சரியாக இருக்கும். ஆனால் அஞ்ச லியும், ஓவி யாவும் அதற்கு நேர் மாறாக இருந்தா ர்கள். இரண்டு பேரும் நெரு க்கமான தோழிகள் ஆகிவிட்டார்கள். ஒரே அறையில் தங்குகிற அளவுக்கு ஒற்றுமை. இருவரும் ஒரு வரை யொருவர், “டார்லிங்… டார்லிங் …” என்றுதான் அழைப்பார்கள். இதே போல் விமலும், சிவாவும் “மாமா … மச்சான்…” என்று அழைத்துக் கொண் டார்கள். அதனால், எனக்கு படப்பிடிப் பில் எந்த பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு சுந்தர் சி. பேசினார்.

நடிகர் சிவா பேசும்போது, “இந்த படத் தின் படப்பிடிப்பின்போது அஞ்சலியும், ஓவியாவும் எப்போதும் சேர்ந்தே இருப் பார்கள். இரண்டு பேருக்கும் இடையே `கெமிஸ்ட்ரி’ பொருந்தி இருந்தது” என் றார்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply