Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இள வயது செக்ஸ் உறவால் பால்வினை நோய்க்கு ஆளாகும் பள்ளி மாணவர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பள்ளி செல்லும் மாணவர்கள் கூட செக்ஸ் பற்றி பேசும் காலம் வந் து விட்டது. பள்ளி மாணவிகள் கழிவறையில் குழந்தை பெற்று மறைத்து வைத்து அதிர வைக்கி றார்கள். அமெரிக் காவில் அல்ல இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில்தான்.
இவ்வாறு இளம் வயதில் செக் ஸ் உறவு வைத்துக் கொள்வதி னால் எஸ்.டி.டி ( STD) sexually transmitted diseases எனப்படும் பால்வினை நோய்க்கு பதின் பரு வத்தினர் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று தெரி வித்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 40 சதவிகித பதின் பருவத்தினர் கர்ப்பமடைகின்றனர் என  தெரியவந்துள்ளது. இணையம், தொ லைக் காட்சிகளின் புண்ணியத்தில் இந்தியாவிலும் இந்தநிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் இளவயதினர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பெரும் பாலான இளவயதினர் கர்ப்பம் ஏற்படுவதை தவிர்க்க முறையற்ற வழிகளை கையா ளுகின்றனர் இது அவர்களின் ஆரோக் கியத்திற்கு உலை வைக்கிறது.

பதின் பருவத்தில் ஏற்படும் செக்ஸ் ஆர்வம் அவர்களை எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோயிலு ம் தள்ளிவிடுகிறது. இந்த எஸ்.டி. டி பற்றி இன்னமும் பெரும்பாலா னோருக்கு விழிப்புணர்வு இல் லை. ஹெச்ஐவி, எய்ட்ஸ் போல இதுவும் அச்சம் தரக்கூடிய நோய் என்பதை உணரவேண்டும்.

இந்த நோய் குறித்து விழிப்புண ர்வு ஏற்படுத்தவும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும், அமெரிக்காவில் ஆங்கா ங்கே எஸ்.டி.டி கிளீனிக்குகள் உள்ளன. தற்போது பெரும்பாலான டீன் ஏஜ் வயதினர் அறியாமை யினால் எஸ்.டி.டி நோய்க்கு ஆளாகி வருவதாகவும் எச்சரித் துள்ளனர்.

பதின் பருவத்தில் செக்ஸ் ஈடு பாடு குறித்து அமெரிக்காவின் ஒஹியோ மாநில மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியா ளர்கள் மேற்கொண்ட ஆய்வில் டீஜ் ஏஜ் செக்ஸ் மூளை நரம்பு களை பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். எலிகளை கொண்டு நடத் தப்பட்ட ஆய்வி ல் இது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் இளம் வயதின ரிடையே இதுகுறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா க தெரியவில்லை. பள்ளி பருவத்திலேயே பாலியல் குறி த்த விழிப்புணர்வும், அது குறி த்த அவசியமும் கல்வி வாயி லாக அறிவுறுத்தப்பட வேண் டும் என்கின்றனர் சமூக ஆர்வ லர்கள்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: