Tuesday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 24, இதே நாளில் . . .


1973 – சச்சின் டெண்டுல்கர், இந்தியத் துடுப்பாட்ட மட்டையாளர் பிறந்த நாள்

1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் அவரது குதிகுடை திறக்கமுடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.

1990 – டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

1993 – இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது.

2007 – பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளி ன் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply