தமிழில் நண்பன் படத்தில் விஜய்ஜோடியாக நடித்தவர் இலியானா . தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் பர்பி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் இன் னொரு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக் கிறார். இருவருக்கும் படப் பிடிப்பில் மோதல் ஏற்பட் டதாக தகவல் வெளியான து. இருவரும் தனக்குத்தா ன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறு த்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒரு வரை யொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவின ர் சமரசப்படுத்தியதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளது.
இது குறித்து இலியானாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பிரியங்கா சோப்ராவும் நானும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கி றோம். பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன். ஒரு ந டிகை என்ற ரீதியிலேயே எங்களுக்குள் அறிமுகம் உள்ளது. வேறு எந்த தொடர் பும் இல்லை. எங்களுக்குள் மோதல் நடந் ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. சினிமாவில் யார் தயவும் இன் றி தனி ஆளாக நின்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். கடவுள் தயவால்தான் இதை சாதிக்க முடிந்தது. சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் மிகவும் கஷ் டப்பட்டேன். எனது முதல் தெலுங்கு பட ம் ஹிட்டானது. அதன் பிறகு எனக்கு தைரி யம் வந்து விட்டது. இவ்வாறு இலி யானா கூறினார்.
இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.