கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளியான ஃபயர் என்ற படத்தில் லெஸ்பியனாக நடித்து பெரும் சர்ச்சையில் சிக்கியவரும் அழகி, கன்னத்தில் முத்தமிட் டால் போன்ற தமிழ் படங்க ளில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்றவருமான நடிகை நந்திதா தாஸ் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்து ள்ளார். சீனு ராமசாமி இயக்க த்தில் நீர்ப்பறவை என்ற தமிழ் படத்தில் தான் நந்திதா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக் கிறார். நந்திதா தாஸ் கடைசியாக நடிந்த ஐ யம் என்ற படம் வெளி
யாகி, கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெ ளிக்கு பிறகு இந்த படத்தில் நடிக்கவிரு ப்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள து. இதுகுறித்து நந்திதா தாஸ் கூறுகை யில், எனக்கு குழந்தை பிறந்த பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்ட தொடங்கியிருக்கிறேன். தற்போ து நான், இரண்டு படத்தில் நடிக்கவிருக் கிறேன். சீனு ராமசாமி இயக்கத்தில் நீர்ப் பறவை. என்ற படமும், புதிய இயக்குநர் ஒருவர் இயக்கும் இந்திப் படமும் ஆகும் .. இதில் நீர்பறவை படம் மீனவர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்ப ட்டு வருகிறது. இந்தியில் உருவாகும் படம் மாவொயிஸ்ட்களால் பாதிக்கப்ப ட்ட மக்களின் கதை. இரண்டு படமும் ரொம்ப அருமையான கதை. இது தவிர இன்னொரு இந்தி படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இரண்டு பட சூட்டிங்கிலும் பங்கேற்க ஆர்வமாய் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.