Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிங்கம் -2 திரைப்படத்தைப்பற்றிய புதிய தகவல்

சிங்கம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சூர்யா – ஹரி கூட்ட‍ணி நான்காவதாக இணையும் படம் சிங்கம் -2 ஆறு, வேல், சிங்கம் ஹாட்ரிக் வெற் றிக்குப்பிறகு இப்ப‍டத்தின் கதையம்சம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கோணத்துடன் மிகப் பிரம்மாண்ட மான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி றது. இது ரசிகர்க ளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா சிங்கம் -2 படப்பிடி ப்பில் கலந்து கொள்கிறார்.

இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா மற் றும்  ஹன்சிகா ஆகிய இரு கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார் கள். மேலும் சிங்கம் படத்தில் நடித்த‍ விவேக், விஜயகுமார், ராதா ரவி , நாசர் ஆகியோருடன் ரகுமான் மற்றும் பல புதிய கதாபாத்திரங்கள் இணைய வுள்ள‍னர். இவர்களுடன் சந் தானம் நகைச்சுவை கதா பாத்திரத்தில் நடிக் கிறார்.

சென்னை, ஹதராபாத், தூத் துக்குடி, திருநெல்வேலி மற் றும் காரைக்குடி ஆகிய இடங் களில் இப்ப‍டத்தின் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ள‍து. இயக்குநர் ஹரி முதன்முறையாக படத்தின் சில முக்கிய காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை தென் ஆப்பிரி க்கா, கென்யா போன்ற ஆப்ரி க்க‍ நாடுகளில் படமாக்குகி றார்.

சிங்கம் படத்திற்கு இசைய மைத்த‍ தேவி  ஸ்ரீ பிரசாத் மீண்டும்  இப்ப‍டத்திற்கு இசை யமைத்துள்ளார். ஒளி ப்திவு – பிரியன், படத் தொகுப்பு – வி.டி. விஜயன், கலை கே. கதிர், பாடல்கள் – நா. முத்துக்கு மார், விவேகா, மதன், நடனம் – பிருந்தா, பாபா பாஸ்கர், தயாரிப்பு மேற்பார்வை – சந்தானம், தயாரிப்பு நிர்வாகம் – சின்ன‍ ராஜேந்தர், பத்திரிகை தொடர்பு – ஜான்சன். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்க‍ம் – ஹரி. பிரின்ஸ் பிக் சர்ஸ் நிறுவனத்தின் லக்ஷ்மணன் இப்ப‍டத்தைத் தயாரித்து வரு கிறார்..

செய்தி –  பாலா
விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: