Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்ன‍து காதலா? அதுக்கு எங்க சார் இப்ப‍ நேர இருக்கு என அலுத்துக்கொள்பவர்கள் மட்டுமே படிக்க‍வும்

ஐந்து இலக்க சம்பளம், மல்ட்டிநேசனல் கம்பெனி வேலை என இன் றைய இளையதலைமுறை நிறையவே மாற்றங்களை சந்தித்து வருகிறது. தம்பதி யர் இருவரும் வேலைக்கு செல்வதால் இருவரும் தங் களின் காதலை சரியாக பகிர் ந்து கொள்ளக்கூட நேரமிருப் பதில்லை.

 
காலை நேரத்தில் அவசரமா க கிளம்பவும், மாலையில் அயர்ச்சியாக திரும்பி வந்து உறங்கவு ம்தான் முடிகிறது. இதனால் இல்லற வாழ்க்கை ஒருவித வெறுமை நிரம்பியதாக மாறிவிடுகிறது. நாளடைவில் விரிசலையும் ஏற்ப டுத்திவிடுகிறது. இதனை தவிர்க்கவும், இல்லறத்தை உற்சாகம் மிக்கதாக மாற்றவும் ஆ லோசனை கூறியுள்ளனர் உளவியல் நிபுணர்கள். படித்து பாருங்களேன்.
 
குடும்பத்திற்கான நாள்
 
இப்பொழுதெல்லாம் 5நாள் வேலை 2 நாள் விடுமுறை என்றாகி விட்டது. எனவே விடுமுறை நாட்களை குடும்பத்திற்கென ரிசர்வ் செய்யுங்கள். அதி ல் எந்த கமிட்மென்ட்டும் வேண்டாம். துணையுடன் அமர்ந்து பேச வும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாட்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஜாலியாக வெளியில் சென்று ஐஸ் கிரீம் சாப்பி டலாம், திரைப்படத்திற்கு செல்லலாம். இது உங்களின் காதல் வாழ்க்கையை உற்சாகப்படுத்தும்.
 
நோ மிஸ்டு கால்
 
என்னதான் தலை போகிற வேலையாக இருந்தாலும் மனைவி அழைத்தால் அந்த போனை எடுத்து பேசுங்கள். அதை எடுக்காமல் மிஸ்டு காலாகும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையும் மிஸ் ஆகும் சூழல் உருவாகும். இப்பொழுது இருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆயிரம் முறை ஐ லவ் யூ எஸ்எம் எஸ் அனுப்பலாம். மெயில், சாட்டிங், என ஏதாவது ஒரு விதத்தில் பணிச்சூழலுக்கு இடையே துணையுடன் உரையாடுங்கள். அது பணிச்சுமையை குறைக்க உதவும்.
 
இன்ப அதிர்ச்சி
 
வேலைக்காக உங்கள் துணைவி பேருந்தில் சென்று வருகிறார் என் றால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் அலுவலகத் தில் இருந்து அவரை அழைத்து வரலாம். அவ்வப்போது வரும் வழியில் உள்ள உணவகங்களிலே யே அமர்ந்து டிபன், ஐஸ்கிரீம் என சாப்பிடுவது இருவருக்குமே உற்சா கத்தை அதிகரிக்கும். அதேபோல் கணவருக்கு பிடித்தமான ஆடைக ளை அயர்ன் செய்து வை ப்பது ஒருவருக்கொருவர் செய்து கொள் ளும் சின்ன உதவிகள் தான் உள்ளத்தில் காதல் உணர்வுகளை உற் சாகப்படுத்தும்.
 
அன்பார்ந்த பரிசுப்பொருள்
 
தங்கம், வைரம் என விலை உய ர்ந்த பரிசுப்பொருட்களை வாங்கி குவித்தால்தான் துணைவிக்கு பிடிக்கும் என்றில்லை. உங்களின் உணர்வுகளை, ரசனைகளை து ணையுடன் பகிர்ந்து கொண்டாலே போதும் அதுவே அவருக்கு நீங் கள் தரும் மிகப்பெரிய பரிசுப் பொ ருள். உங்களுக்கு வரும் நல்ல நகைச்சுவை துணுக்குகள், பேஸ் புக், டுவிட்டரில் உங்களுக்கு கி டைத்த நல்ல படங்கள் என துணையின் மெயிலுக்கு அனுப்புங்கள். உங்களுக்கு இடையேயான காதல் பற்றி ப் படரும்.
 
சின்ன சின்ன உதவிகள்
 
வீட்டு வேலைகளில் செய்யும் சின்ன சின்ன உதவிகள் துணைவியின் இதய த்தை வெல்லும் எளிய வழி. சமையலி ல் உதவி செய் யும் போது நடக்கும் சின் ன சின்ன ரொமான்ஸ்கள் அன்றைய நாள் முழுவதும் நீடிக்கும் அலுவலகப் பணியை உற்சாகத்துடன் செய்யலாம். பணிக்கு செல்லும் இளம் தம்பதியரே இதை பின்பற்றிப் பாருங்களேன். மன அழுத்தம் எது வும் இன்றி வாழ்க்கையை உற் சாகமுடன் தொடரலாம்.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: