Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஏப்ரல் 27, இதே நாளில் . . .

1865 – 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல் டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கி யதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும் பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்ட கூட்டணிப் படையினராவார்.

1992 – சேர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.

1993 – காபோனில் இடம்பெற்ற விமான விபத்தில் காம்பியாவின் தேசிய காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.

1994 – தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.

2001 – தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை (ஹீனி கல) விடுதலை ப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும்மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.

2002 – நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவை யாக தொடர்புகள் கிடைத்தது.

2007 – எஸ்தோனியாவின் தலைநகர் தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செம்படையின் நினைவுச் சிலை அங்கிருந்து அகற் றப்பட்டது.

– செந்தில்குமார் ரங்கராஜன்

Leave a Reply