Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய 6-iv மேசை கணினிகளை களமிறக்க இருக்கும் “HP” நிறுவனம்

எச்பி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியா தர இருக்கிறது. அது என்னவென்றால் எச்பி புதிய 6 ஐவி மேசை கணினிகளை கள மிறக்க இருக்கிறது என்பதாகும். ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வரும் இந்த கணினிகளுக்கு இப் போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவு கிறது.

 
இந்த 6 மாடல்களில் ஒன்றான ஓம்னி 220க்யுடி மாடல் சூப்பரான டிசைனுடன் பீட்ஸ் ஆடியோ கொண்டு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.50000 ஆகும்.
 
அடுத்ததாக ஓம்னிக்யுடி கணினி 27 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகி றது. இதன் விலை ரூ.60000 ஆகும்.
 
தொடுவசதி கொண்டு வரும் டச்ஸ்மார்ட் 520எக்ஸ்டி கணினி 23 இன்ச் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இதன் விலை ரூ.50000 ஆகும். இந்த மூன்று கணினிகளும் ஆல் இன் ஒன் மாடலில் வருகிறது.
 
மற்ற 3 மாடல் கணினிகளும் ஸ்டேன் அலோன் மாடல்களில் வரு கின்றன. அதாவது எச்பிஇ எச்8டி கணினியின் விலை ரூ.35000 ஆகும். அடுத்ததாக எச்பிஇ எச்8எக்ஸ்டி கணினி ரூ.40000க்கு விற்கப்படும். இவற்றில் உயர்ந்த தரத்தில் வரும் எச்பிஇ போனி க்ஸ் எச்9டி கணினியை ரூ.58000 க்கு வாங்கலாம்.
 
மேற்சொன்ன இந்த 6 மேசைக் கணி னிகளும் மிக உறுதி வாய்ந்த கணி னிகளாகும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஏனெனி ல் இவை பலம் வாய்ந்த ஐ வி பிரி ட்ஜ் ப்ராசஸர்களைக் கொண்டிரு க்கின்றனர். அதனால் இவை எச்டி மீடியா மற்றும் 3டி க்ராபிக் சிற்கு உத்திரவாதம் அளிக்கும்.
 
இந்த ஏப்ரல் இறுதிக்குள் எச்பிஇ போனிக்ஸ் எ9டி ஐவி பிரிட்ஜ் மேசை கணினி விற்பனைக்கு வந்துவிடும். மற்ற 5 மாடல்களும் வரும் ஜூன் மாதத்திற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம்
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: