இந்திய சுதந்திரத்தின் பின் தமிழ்நாட்டை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ஆட்சியைக் கைப் பற்றி சுதேச கட்சியான அண்ணா துரை தலைமையிலான “திராவிட முன்னேற்றக் கழகம் ” ஆட்சி அமைத்தது.
சுமார் 1,1/2 வருடங்ளே அண்ணா முதல மைச்சராக ஆட்சி செய்தாலும் இன்றும் போற்றப்படும் வகையில் அவர் ஆட்சியும், அவரது பேச்சு க்களும் இருந்தன.
தனது பேச்சுக்களால் தன்னவர்களை மட்டும் அல்ல, எதிர்க்கட்சிக் காரர்களையும் கட்டிப்போடும் வல்லமை உள்ளவர் அண்ணா. அவ ரது பதில்கள் மிகச்சுவையானதாகவும், ஆனா ல் கேட்பவரை காயப்படுத்தாதவையாகவும் நகைச்சுவையானதாகவுமே இருக்கும். உதார ணமாக ஒரு சம்பவம்.
தமிழகச் சட்டமன்றத்தில் அன்றைய பேச்சாள ரும், முதுகலை பட்டதாரியும், வழக்கறிஞரு மாகிய தீவிர காங்கிரஸ்காரர் கே.விநாயகம் ஒருநாள் சட்டமன்றத் தில் வாக்குவாதத்தில் மிகக்கோபமாக ஒருநாள் அண்ணாவைப் பார்த்து,
Mr.Anna Your Days are counted! எனத்தெரிவித்தார்.
அதற்கு உடனடியாக பேரறிஞர் அண்ணா மிக நிதானமாக
Mr.Vinayagam… My Steps are measured! எனப்பதிலளித்தார்.
அதைக்கேட்டதும் கே.விநாயகம் வியப்பு கலந்த புன்னகையுடன் கோபம் பறந்து போ னது தெரியாமல் தனது இருக்கையில் அமர் ந்து கொண்டாராம்.